நிதி அமைச்சகம்
2021ம் ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டின் பொது கடன் மேலாண்மை அறிக்கை
प्रविष्टि तिथि:
25 JUN 2021 3:28PM by PIB Chennai
மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறையின் பொது கடன் மேலாண்மை பிரிவு கடந்த 2010-11ம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூனிலிருந்து கடன் மேலாண்மை குறித்த காலாண்டு அறிக்கையை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. தற்போது 2021ம் நிதியாண்டின் காலாண்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2021ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் மத்திய அரசு ரூ. 3,20,349 மதிப்பிலான பங்கு பத்திரங்களை வெளியிட்டது. இது 2020ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.76,000 கோடியாக இருந்தது. அதே நேரத்தில் திருப்பி செலுத்துதல் ரூ.29,145 கோடியாக இருந்தது.
முதன்மை பங்கு பத்திர வெளியீடுகளின் சராசரி, 2021ம் நிதியாண்டில் நான்காவது காலாண்டில் 5.80 சதவீதமாக அதிகரித்தது. இது 2021ம் நிதியாண்டின் 3வது காலாண்டில் 5.80 சதவீதமாக இருந்தது.
மார்ஜினல் ஸ்டாண்டிங் வசதி மற்றும் சிறப்பு பணப்புழக்க வசதி உள்ளிட்ட பணப்புழக்க சரிசெய்தல் வசதியின் (எல்ஏஎஃப்) கீழ், ரிசர்வ் வங்கியின் நிகர தினசரி சராசரி பணப்புழக்கம் ரூ.3,35,651 கோடியாக இருந்தது.
தற்காலிக தரவுகளின்படி, மத்திய அரசின் மொத்த கடன்கள் ('பொது கணக்கு' கீழ் உள்ள கடன்கள் உட்பட), 2021 மார்ச் மாத இறுதியில் ரூ. 1,16,21,781 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2020 டிசம்பர் இறுதியில் ரூ .1,09,26,322 கோடியாக இருந்தது.
இந்த அறிக்கையின் விவரத்தை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கவும்:
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/jun/doc202162531.pdf
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730292
*****************
(रिलीज़ आईडी: 1730340)
आगंतुक पटल : 291