புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
எரிசக்தி மாற்றத்தை உருவாக்குவதற்கான இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்த கையேட்டை மின்சாரம் மற்றும் புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு ஆர் கே சிங் வெளியிட்டார்
Posted On:
25 JUN 2021 3:01PM by PIB Chennai
கடந்த 6 வருடங்களில் இந்தியாவில் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் இரண்டரை மடங்கு உயர்ந்து 141 ஜிகா வாட் எனும் அளவை அடைந்திருக்கிறது என்றும், நாட்டின் மொத்த திறனில் இது 37 சதவீதம் (2021 ஜூன் 16 நிலவரப்படி) என்றும் புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இணை அமைச்சரும் (தனிப் பொறுப்பு), திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைதல் இணை அமைச்சருமான திரு ஆர் கே சிங் கூறினார்.
நிறுவப்பட்ட சூரிய சக்தி திறன் இதே காலத்தில் 15 மடங்கு அதிகரித்து 41.09 ஜிகா வாட் எனும் அளவை அடைந்திருக்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் உலகிலேயே நான்காவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது.
எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் தண்ணீருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவின் நிரந்தர அமைப்புடன் இணைந்து புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ஏற்பாடு செய்த “மக்கள் சார்ந்த எரிசக்தி மாற்றத்தை வேகப்படுத்துதல்” எனும் நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.
2021 செப்டம்பர் 20 அன்று நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் உயர்மட்ட எரிசக்தி கூட்டத்திற்கான அமைச்சரவை மையக்கரு சார்ந்த அமைப்புகள் வாரத்தை (2021 ஜூன் 21-25) ஒட்டி காணொலி மூலம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தின் ஐந்து முக்கிய மையக்கருக்களில் ஒன்றாக விளங்கும் “எரிசக்தி மாற்றத்தின்” சர்வதேச வீரராக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி மாற்றத்தை உருவாக்குவதற்கான இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்த கையேடான “தி இந்தியா ஸ்டோரி”-ஐ அமைச்சர் வெளியிட்டார். இத்துறையில் இந்தியா எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள் நமது லட்சியம் மிகுந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கும். மக்களை மையப்படுத்தும் இந்த மாற்றத்தின் மூலம், குறைந்த விலையிலான, நம்பத்தகுந்த, நீடித்த மற்றும் நவீன எரிசக்தி அனைவருக்கும் கிடைக்கும்.
உலகெங்கும் உள்ள எரிசக்தி மாற்றம் தொடர்பான அறிவுசார் தகவல்கள் மற்றும் தரவுகளின் களஞ்சியமான www.energytransition.in எனும் இணையதளத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியாவில் மூதலீடுகள் செய்யப்படுவதை ஊக்கப்படுத்துவதற்காக, முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளும் ஒரே இடத்தில் செய்யக்கூடிய வகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வசதி வாரியம் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1730284
*****************
(Release ID: 1730335)
Visitor Counter : 315