வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

அல்கேரியாவுக்கு வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக இந்திய தூதரகத்துடன் இணைந்து வாங்குவோர், விற்போர் காணொலி கூட்டத்தை அபேடா நடத்தியது

Posted On: 24 JUN 2021 8:00PM by PIB Chennai

அல்கேரியாவுக்கு அனுப்பப்படும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக இந்திய தூதரகத்துடன் இணைந்து வாங்குவோர் , விற்போர் கூட்டத்தை காணொலி மூலம் அபேடா நடத்தியது, இரு நாடுகளின் வேளாண் மதிப்பு சங்கிலிகளில் இருக்கும் முக்கிய பங்குதாரர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்தியா மற்றும் அல்கேரியாவுக்கிடையே வேளாண் துறையில் உள்ள வாய்ப்புகள்எனும் தலைப்பிலான இந்த காணொலி வாங்குவோர், விற்போர் கூட்டத்தில் இந்தியா மற்றும் அல்கேரியாவின் ஏற்றுமதியாளர்கள், பதப்படுத்தும் தொழிலில் இருப்பவர்கள் மற்றும் வேளாண் பொருள் வணிகர்கள் உள்ளிட்ட 100-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக ஏற்றுமதி ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளை நேரடியாக நடத்த முடியாததால், ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கான தளத்தை வழங்குவதற்காக காணொலி வாங்குவோர், விற்போர் கூட்டங்களை பல்வேறு நாடுகளுடன்  அபேடா நடத்தி வருகிறது.

அல்கேரிய வணிகர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடன் நடைபெற்ற இந்த காணொலி  கூட்டத்தில், இந்திய புவிசார் குறியீடு சான்று பெற்ற வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தானியங்கள், விலங்கு பொருட்கள், பாஸ்மதி அல்லாத மற்றும் பாஸ்மதி அரிசி ஆகியவற்றை அல்கேரியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அபேடா மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுடன், அனைத்திந்திய அரிசி ஏற்றுமதியாளர் சங்கம், அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கம், அகில இந்திய உணவு பதப்படுத்துவோர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், சார்ல் அக்ரோ பிளாஸ்ட் கம்பாண்ட், இயுர்ல் க்பிலின், ஹட்டாடி மெட் பிசினஸ் எக்ஸ்போர்ட் உள்ளிட்ட அல்கேரிய இறக்குமதியாளர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730127

-----(Release ID: 1730152) Visitor Counter : 33


Read this release in: English , Urdu , Hindi , Punjabi