அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

உலோக காற்று மின்கலன்களுக்காக குறைந்த செலவில் தரமான வினையூக்கிகள் உருவாக்கம்

प्रविष्टि तिथि: 24 JUN 2021 4:15PM by PIB Chennai

புதிய விலைமதிப்பற்ற உலோகத்தின் அடிப்படையில் 2 வெவ்வேறு விதமான எதிர்வினைகளை வினையூக்கும் திறன்வாய்ந்த மின்-வினையூக்கியால் உலோக காற்று மின்கலன்களின்  கட்டணத்தைக் குறைத்து தரத்தை உயர்த்த முடியும்.

பல்வேறு விதமான எரிசக்திகளுக்குத் தேவை அதிகரித்து வரும் நிலையில் லித்தியம்-அயான் மின்கலன், ஈயம் அமில மின்கலன், ரெடாக்ஸ் சார்ந்த மின்கலன், லித்தியம்- காற்று மின்கலன், துத்தநாகம் காற்று மின்கலன், சோடியம்- அயான் மின்கலன், எரிபொருள் மின்கலம் போன்ற பல்வேறு எரிசக்தி உபகரணங்களை உருவாக்கும் முயற்சிகள் உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் தன்னாட்சி மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி மையமாக இயங்கும் தூள் உலோகம் மற்றும் புதிய பொருள்களுக்கான சர்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையம், குறைந்த செலவிலான மின்-வினையூக்கியை உருவாக்கியுள்ளது. பயன்படுத்தப்பட்ட அயோனாமர்களை மீண்டும் பயன்படுத்தவும் இந்த வினையூக்கி முறை உபயோகமாக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730034

----


(रिलीज़ आईडी: 1730103) आगंतुक पटल : 303
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Punjabi , Urdu , हिन्दी , Bengali