சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இரண்டாவது டோஸ் கொவிட்-19 தடுப்பூசியை திரு அஷ்வினி குமார் சவுபே பெற்றுக்கொண்டார்

Posted On: 24 JUN 2021 5:11PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் திரு அஷ்வினி குமார் சவுபே மற்றும் அவரது மனைவி திருமதி நீதா சவுபே ஆகியோர் இரண்டாவது டோஸ் கொவிட்-19 தடுப்பூசியை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று செலுத்திக்கொண்டனர்.

அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அமைச்சர், “தடுப்பு மருந்தே நமது பாதுகாப்பு கவசம். கொரோனாவுக்கு எதிரான போரில் நமது பாதுகாப்பை அது பலப்படுத்துகிறது. பெருந்தொற்றில் இருந்து தங்களையும் தங்களது அன்புக்குரியவர்களையும் காக்க நமது நாட்டு மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்,” என்று கூறினார்.

தடுப்பு மருந்து பெற்றுக்கொண்டாலும் சரியான கொவிட் நடத்தைமுறைகளை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். விதிகளை கடைப்பிடித்தல் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் ஆகியவை கொவிட்டுக்கு எதிரான நமது மக்கள் இயக்கத்தின் முக்கிய தூண்களாகும். தடுப்பு மருந்து மற்றும் எச்சரிக்கை ஆகிய இரண்டுமே முக்கியம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730057

-----



(Release ID: 1730091) Visitor Counter : 257