நிதி அமைச்சகம்

மிசோராமில் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக $32 மில்லியன் கடன் ஒப்பந்தத்தில் உலக வங்கியுடன் இந்திய அரசு கையெழுத்து

Posted On: 24 JUN 2021 4:00PM by PIB Chennai

மிசோராமில், குறிப்பாக சேவைகள் அதிகம் சென்றடையாத பகுதிகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான சுகாதார சேவைகளின் நிர்வாகத் திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்காக, $32 மில்லியன் மதிப்புடைய மிசோராம் சுகாதார சேவைகள் வலுப்படுத்தல் திட்டத்தில் இந்திய அரசு, மிசோராம் அரசு மற்றும் உலக வங்கி கையெழுத்திட்டன.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை மற்றும் அதன் துணை அமைப்புகளின் நிர்வாகம் மற்றும் மேலாண்மை அமைப்பை வலுப்படுத்துதல், மாநில அரசு சுகாதார அமைப்புகளால் வழங்கப்படும் சேவைகளின் தரம் மற்றும் பரவலை மேம்படுத்துதல், தர சான்றை பெறக்கூடிய வகையில் சுகாதார வசதிகளுக்கான விரிவான தர உறுதி திட்டத்தில் முதலீடு செய்தல் ஆகியவற்றில் இந்த திட்டம் கவனம் செலுத்தும்.

மாநில சுகாதார காப்பீட்டு திட்டத்தின் செயல்திறனை வலுப்படுத்துதல், இந்திய அரசின் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்துடன் உறவை பலப்படுத்துதல், இதன் மூலம் மருத்துவமனை சேவைகளை அணுகுவதில் உள்ள நிதி சார்ந்த தடைகளை குறைத்தல், மருத்துவ சேவைகளுக்காக செலவு செய்வதன் மூலம் ஏழைகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுத்தல், சேவைகளை விரிவாக்குவதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்திய அரசின் சார்பாக நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் திரு ரஜத் குமார் மிஷ்ரா, மிசோராம் சார்பாக மிசோராம் சுகாதார அமைப்புகள் வலுப்படுத்தல் திட்ட இயக்குநர் திரு எரிக் சோமாவியா மற்றும் உலக வங்கியின் சார்பாக இந்தியாவுக்கான அதன் இயக்குநர் திரு ஜுனாய்த் அகமது ஆகியோர் ஒப்பந்தத்தில் 2021 ஜூன் 17 அன்று கையெழுத்திட்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730027

-----



(Release ID: 1730075) Visitor Counter : 234


Read this release in: English , Urdu , Hindi , Punjabi