ரெயில்வே அமைச்சகம்

2.7 லட்சம் டன் சரக்குகளை கிசான் ரயில்கள் கொண்டு சென்றதன் மூலம் நாடு தழுவிய அணுகல் இந்திய விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது

Posted On: 23 JUN 2021 6:53PM by PIB Chennai

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளின் முக்கிய அங்கமாக இந்திய ரயில்வே திகழ்கிறது. கிசான் ரயில்களின் அறிமுகம் மூலம் நாடு தழுவிய அணுகல் விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது. 2.7 லட்சம் டன் சரக்குகளை கிசான் ரயில்கள் இதுவரை கொண்டு சென்றுள்ளன. 60 வழித்தடங்கள் செயல்பாட்டில் உள்ளன.

கிசான் ரயிலின் முக்கிய அம்சங்கள்

* பழங்கள், காய்கறிகள், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மீன் மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்ட அழுகக்கூடிய பொருட்களை உற்பத்தியாகும் அல்லது உபரியாக உள்ள பகுதிகளில் இருந்து நுகரும் அல்லது பற்றாக்குறையாக உள்ள பகுதிகளுக்கு எடுத்துச் செல்கிறது.

* விரைவான போக்குவரத்தின் காரணமாக குறைவான பாதிப்பு ஏற்படுகிறது.

* தொலைதூர, பெரிய மற்றும் கவர்ச்சிகரமான சந்தைகளுக்கு பொருட்களை அனுப்ப ரயில்வேயின் பரந்து விரிந்த வலைப்பின்னல் விவசாயிகளுக்கு உதவுகிறது.

 

* பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான கட்டணங்களில் 50 சதவீதம் மானியம் (ஆப்பரேஷன் கிரீன் - டாப் டூ டோட்டல்திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது).

* பல பொருட்களை, பல இடங்களுக்கு எடுத்து செல்வதால், குறைந்த சரக்குகளுடன் கூடிய சிறிய விவசாயிகளும் தொலைதூர, பெரிய சந்தைகளை அணுக முடிகிறது.

* பயண நேரம் மற்றும் செலவு குறைவதால் (பெரிய நகரங்கள் மற்றும் நுகர்வு மையங்களில் உள்ள) நுகர்வோருக்கு குறைந்த விலையில், பண்ணை பசுமை பொருட்கள் கிடைக்கின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1729828

*****************


(Release ID: 1729862) Visitor Counter : 223