பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் இந்திய பழங்குடி பொருட்களுக்கு அமோக வரவேற்பு
Posted On:
22 JUN 2021 4:31PM by PIB Chennai
சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நியூயார்க்கின் டைம்ஸ் ஸ்கொயரில் யோகா, முழுமையான சுகாதாரம், ஆயுர்வேதம் மற்றும் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் வகையிலான நிகழ்ச்சிகளுக்கு நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது. நியூயார்க்கில் பிரசித்திபெற்ற பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் 3000 பேர் கலந்து கொண்டனர்.
நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் பொருட்கள் மற்றும் ஆயுர்வேத பொருட்கள் முதலியவற்றை உள்ளடக்கிய தனித்துவம் வாய்ந்த இயற்கையான பழங்குடிப் பொருட்களைக் காட்சிப்படுத்தியிருந்த அரங்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. டிரைப்ஸ் இந்தியா சார்பாக அமைக்கப்பட்டிருந்த அரங்கு பெரும்பாலான மக்களைக் கவர்ந்தது. நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்க்கும் பொருட்கள், சிறுதானியங்கள், அரிசி, வாசனைப் பொருட்கள், தேன், நெல்லிக்காய், அஸ்வகந்தா பொடி, மூலிகை தேநீர் மற்றும் காபி, யோகா தரைவிரிப்புகள் புல்லாங்குழல்கள், மூலிகை சோப்புகள், மூங்கிலால் செய்யப்பட்ட வாசனை மெழுகுவர்த்திகள் போன்றவை இந்த அரங்கில் விற்பனை செய்யப்பட்டன. பெருந்திரளான மக்கள் இந்த அரங்கிற்கு வந்திருந்ததுடன், இந்திய பழங்குடியின மக்கள் மற்றும் பழங்குடி பொருட்களின் சிறப்பம்சம் குறித்து ஆர்வமுடன் கேட்டறிந்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729406
*****************
(Release ID: 1729455)
Visitor Counter : 222