தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

பிரபல யோகா வல்லுனர் தர்மவீர் சிங் மஹிதா எழுதிய யோக சச்சித்ராவின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை வெளியீட்டு பிரிவு கொணர்ந்துள்ளது

Posted On: 21 JUN 2021 6:17PM by PIB Chennai

யோகா ஒரு பண்டைய மனநல மற்றும் ஆன்மிக பயிற்சியாகும். கொரோனா தொற்றால் அவதியுற்று கொண்டிருக்கும் தற்போதைய உலகத்தில், மனதளவிலும் உடலளவிலும் நலமுடன் இருப்பதற்கான சக்தி வாய்ந்த வழிமுறையாக யோகா உருவெடுத்துள்ளது.

பிரபல யோகா வல்லுனர் தர்மவீர் சிங் மஹிதா எழுதிய யோக சச்சித்ரா வெளிவந்த 26 ஆண்டுகளுக்கு பிறகு, அதன் புதுப்பிக்கப்பட்ட மறுபதிப்பை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டு பிரிவு ஏழாவது சர்வதேச யோகா தினத்தை ஒட்டி அச்சிட்டுள்ளது.

யோகாவின் எட்டு பகுதிகளான யமா, நியமா, ஆசனா, பிரணாயாமா, பிரத்யாஹாரா, தராணா, தியானா மற்றும் சமாதி ஆகியவற்றை இந்த இந்தி புத்தகம் அழகாக படம் பிடித்துள்ளது. யோகாசனங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி, பல்வேறு ஆசனங்களை விரிவாக இது விளக்குகிறது.

வீட்டிலுள்ள பொருட்களான நாற்காலி, மேசை, கம்பளிகள், தலையணைகள், மெத்தை மற்றும் சுவர் போன்றவற்றை பயன்படுத்தி வயதில் மூத்தவர்கள், புதிதாக யோகா பயில்பவர்கள், உடலை வளைக்க முடியாதவர்கள் உள்ளிட்டோர் யோகா செய்து பயன் பெறுவது குறித்த புதுமையான செயல்முறைகளை மஹிதாவின் புத்தகம் விளக்குவது இதன் சிறப்பம்சமாகும்.

ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான நோய் தடுப்பு மற்றும் குணப்படுத்தும் உபகரணமாக யோகாவை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து பல்வேறு ஆசனங்கள் மூலம் ஆசிரியர் விளக்குகிறார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729116

----(Release ID: 1729202) Visitor Counter : 152