பாதுகாப்பு அமைச்சகம்

மேற்கு கடற்படை கட்டுப்பாடு மையத்தி்ல சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது

Posted On: 21 JUN 2021 6:34PM by PIB Chennai

கிழக்கு  மற்றும் மேற்கு கடற்படை கட்டுப்பாடு மையங்களில்  சர்வதே யோகா தினம்  இன்று கொண்டாடப்பட்டது. இங்கு கடற்படை வீரர்கள், ராணுவ பொறியியல் சேவை பிரிவினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் யோகா தின நிகழ்ச்சியில் இன்று பங்கேற்றனர்.

மேற்கு வங்கம் முதல் தமிழகம் வரை பரவியுள்ள கிழக்கு கடற்படை கட்டுப்பாடு மையத்தில் உள்ள அனைத்து கடற்படை பிரிவுகளும் யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். அந்தந்த கடற்படை தளங்களில் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படி யோகா நிகழ்ச்சிகள் கொவிட் நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டன. இதில் பல வகை ஆசனங்கள் மற்றும் மூச்சுப் பயிற்சிகள், தியானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

கிழக்கு கடற்படை கட்டுப்பாடு மையத்தின் கீழ் உள்ள போர்க்கப்பல்களில் யோகா நிகழ்ச்சிகள் நடந்தன.

மேற்கு கடற்படை கட்டுப்பாடு மையத்தில் யோகா தின நிகழ்ச்சிகள்:

மும்பையில் உள்ள மேற்கு கடற்படை கட்டுப்பாடு மையத்திலும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

கடற்படையினர் மனைவிகள் நலச் சங்கம் சார்பில் ஆன்லைன் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர். இதில் பலவகை யோகாசனங்கள் செய்து காட்டப்பட்டன.

மேற்கு கடற்படை கட்டுப்பாட்டு மையத்தின் போர்க்கப்பல்களிலும் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் கடற்படையினர் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729125

 



(Release ID: 1729188) Visitor Counter : 132


Read this release in: English , Urdu , Urdu , Hindi