ஜல்சக்தி அமைச்சகம்
7வது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடியது ஜல்சக்தி அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
21 JUN 2021 6:05PM by PIB Chennai
ஜல்சக்தி அமைச்சகம் சார்பில், இன்று 7வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு நடந்த யோகா நிகழ்ச்சிகளில் ஜல்சக்தி துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவாத், இணையமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜல்சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘‘ உடல் நலத்துக்கான அறிவியல் உபகரணத்தை உலகுக்கு வழங்கிய நாட்டை சேர்ந்தவர்கள் நாம் என்பதில் பெருமைப்பட வேண்டும். சர்வதேச யோகா தினத்தில் அனைவருக்கும் வாழ்த்துகள். கொவிட் தொற்று காலத்தில், யோகாவை நமது உடல் தகுதியின் ஒரு அங்கமாக மாற்ற வேண்டும்’’ என கூறியுள்ளார்.
ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு ரத்தன் லால் கட்டாரியா விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘‘ இந்திய கலாச்சாரத்தில் யோகா விலை மதிப்பற்றது. பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப்பின் நமது யோகா குருக்கள் வழங்கிய யோகா பயிற்சி, உலக நலனுக்காக செயல்படுகிறது. மன அமைதிக்கும், உடல் வலிமைக்கும், யோகாவில் ஈடுபடுவோம் என சர்வதேச யோகா தினத்தில் நாம் உறுதி ஏற்போம்’’ என கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729114
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1729166)
வருகையாளர் எண்ணிக்கை : 190