பாதுகாப்பு அமைச்சகம்

ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா கூட்டு கடற்படை பயிற்சி

Posted On: 21 JUN 2021 2:27PM by PIB Chennai

கூட்டு கடற்படை பயிற்சி ஒன்றை ஏடன் வளைகுடாவில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா இணைந்து 2021 ஜூன் 18 மற்றும் 19 அன்று மேற்கொண்டன.

இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் திரிகண்ட், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஈயூ நாவ்ஃபோர் சோமாலியா- இத்தாலியன் ஃபைரைகேட் கராபினியர் (அட்லான்ட்டாவின் முன்னணி) மற்றும் ஸ்பானிஷ் ஃபிரைகேட் நவர்ரா உள்ளிட்ட ஆப்பரேஷன் அட்லான்டா சொத்துகள், பிரெஞ்சு ஃபரைகேட் சர்கௌஃப் மற்றும் பிரெஞ்சு ஹெலிகாப்டர் தாங்கும் விமானம் டோன்னிர் ஆகியவை இந்த பயிற்சியில் கலந்து கொண்டன.

கொள்ளைகளை தடுக்கும் பொருட்டு இந்த பயிற்சி நடைபெற்றது. துப்பாக்கி சுடுதல், இரவு நேர கூட்டு ரோந்து, சோமாலியா கடற்கரைக்கு அருகே கடற்படை அணிவகுப்பு உள்ளிட்ட பல பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்திய-பசிபிக் பகுதியில் சுதந்திரமான, திறந்தவெளி, அனைவரையும் ஒருங்கிணைக்கும் மற்றும் விதிகள் சார்ந்த செயல்பாடுகளுக்கு ஐரோப்பிய யூனியனும் இந்தியாவும் உறுதி பூண்டுள்ளன. பிராந்திய ஒழுங்கு மற்றும் இறையாண்மை, ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, வெளிப்படைத்தன்மை, கடல் மற்றும் விமான போக்குவரத்து சுதந்திரம், சட்டப்பூர்வ வணிகம் மற்றும் சிக்கல்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காணுதல் ஆகியவை இந்த கூட்டு பயிற்சியின் இதர அம்சங்களாகும்.

 

ஐக்கிய நாடுகள் கடல் சட்ட மாநாடு உள்ளிட்ட சர்வதேச சட்டங்களுக்கும் ஐரோப்பிய யூனியனும் இந்தியாவும் உடன்படுகின்றன. கடல்சார் பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தை ஒன்றை 2021 ஜனவரியில் தொடங்கிய ஐரோப்பிய யூனியனும் இந்தியாவும், இத்துறையில் தங்களது பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்பை ஆழமாக்க ஒத்துக்கொண்டுள்ளன.

உலக உணவு திட்ட கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பளிக்கிறது. இந்திய-பசிபிக் பகுதியில் கடல்சார் பாதுகாப்பில் தங்களது கூட்டை மேம்படுத்த ஐரோப்பிய யூனியனும் இந்தியாவும் உறுதி பூண்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729021

 

----

 



(Release ID: 1729110) Visitor Counter : 236