கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
சர்வதேச யோகா தினத்தை கொண்டாடியது பாரதீப் துறைமுக கழகம்
प्रविष्टि तिथि:
21 JUN 2021 1:54PM by PIB Chennai
ஏழாவது சர்வதேச யோகா தினத்தை, ஒடிசாவில் உள்ள பாரதீப் துறைமுக கழகம் இன்று காணொலி காட்சி மூலம் உற்சாகத்துடன் கொண்டாடியது.
இந்நிகழ்ச்சியை பாரதீப் துறைமுக கழக துணைத் தலைவர் திரு ஏ.கே. போஸ், குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துறைமுக கழக அதிகாரிகள் மற்றும் வாழும் கலை அமைப்பைச் சேர்ந்த திரு எஸ்.கே.சேதி, திரு. தபஸ் ரஞ்சன் பதி ஆகியோர் பங்கேற்றனர்.
ஒட்டு மொத்த நாடும், கொவிட்-19 தொற்றை சந்தித்துள்ள நேரத்தில், யோகா பயிற்சியில் ஈடுபடுவது நமது ஒட்டு மொத்த நலனை உறுதி செய்யும் சக்திவாய்ந்த வழிகளில் ஒன்றாக உள்ளது. துறைமுக கழகத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்(சிஐஎஸ்எப்) தனியாக யோகா நிகழ்ச்சியை நடத்தினர்.
மக்களிடையே யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பேனர்கள், போஸ்டர்கள், மின்னணு திரைகள் துறைமுக கழக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இங்குள்ள புதிய கல்யாண மண்டபத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் துறைமுக கழக ஊழியர்கள் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729009
-----
(रिलीज़ आईडी: 1729097)
आगंतुक पटल : 174