தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு குறும் படங்கள் மற்றும் சொற்பொழிவு, செய்முறை விளக்க நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது திரைப்பட பிரிவு

Posted On: 20 JUN 2021 12:33PM by PIB Chennai

ஏழாவது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் திரைப்பட பிரிவும் இணைந்து கொண்டு குறும் படங்கள் மற்றும் திரைப்படம்விளையாட்டு  உள்ளிட்ட துறைகளின் பல பிரபலங்களின் யோகா சம்பந்தமான கருத்துக்களை ஒளிபரப்புகிறது.

ஏழாவது சர்வதேச யோகா தினமான நாளை ( ஜூன் 21)  திரைப்பட பிரிவின் இணையதளம் மற்றும் யூடியூப் சேனலில் குறும்படங்கள்,திரையிடப்படும். சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்ச்சியாக, திரைப்பட பிரிவு ஊழியர்களுக்கு, யோகா மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது குறித்து யோகா குரு திரு ராம் யோகியின் சொற்பொழிவு மற்றும் செய்முறை விளக்க நிகழ்ச்சி ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது.

பிரபலங்கள் பேசுகிறார்கள்...’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சி குறும்படங்களின் தொகுப்பாகும். இது உடல் மற்றும் மன நலத்தில் யோகாவின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்துகிறது. நாடு முழுவதும் உள்ள சினிமா மற்றும் விளையாட்டுத்துறை பிரபலங்களின் நிகழ்ச்சிகளும் இதில் அடங்கியுள்ளன. பிரபல கலைஞர்கள் ஆஷா போஸ்லே, கபீர் பேடி, மோகன்லால், மம்முட்டி, கமல்ஹாசன், ரமேஷ் அரவிந்த், வெங்கடேஷ், ராணா தகுபதி மற்றும் புனித் ராஜ் குமார், கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே உட்பட பலர்  உடல், மனம் மற்றும் ஆன்மா இடையே சமநிலையை ஏற்படுத்துவதில் யோகாவும், பிராணயாமா ஆகியவை எவ்வாறு உதவுகிறது என்ற தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொள்கின்றனர்.

இந்த குறும்படங்கள்  https://filmsdivision.org/Documentary என்ற இணையதளத்தில் வாரம் முழுவதும் , மற்றும்  https://www.youtube.com/user/FilmsDivision என்ற இணையளத்தில் நாளை (ஜூன் 21) நாள் முழுவதும் ஒளிபரப்பப்படும்.

 

-------



(Release ID: 1728866) Visitor Counter : 170


Read this release in: English , Urdu , Hindi , Punjabi