பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தடுப்பூசித் திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
20 JUN 2021 5:21PM by PIB Chennai
வட கிழக்கு மாகாண வளர்ச்சிக்கான இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தடுப்பூசித் திட்டத்தின் செயல்பாடு குறித்து அதன் அரசு அதிகாரிகளுடன் இன்று ஆய்வு நடத்தினார்.
அந்த யூனியன் பிரதேசத்தில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகள் பற்றியும் நாளை முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொடங்கவுள்ள “அனைவருக்கும் இலவச தடுப்பூசி” பிரச்சாரத்திற்கான திட்டங்கள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சுமார் 76% பேருக்கு ஏற்கனவே தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும், ஜூன் மாத இறுதிக்குள் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியை செலுத்தவும், 18 முதல் 45 வயதிலான பிரிவில் ஜூலை மாத இறுதிக்குள் 50% பயனாளிகளுக்குத் தடுப்பூசியை செலுத்தவும் திட்டமிடப்பட்டிருப்பதாக அமைச்சரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜூன் 21 முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்கவிருப்பதை முன்னிட்டு, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஜூலை 15-ஆம் தேதி அளவில் 18-45 வயது பிரிவில் சுமார் 30% பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் என்று அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.
தடுப்பூசித் திட்டத்தை பொது மக்களுக்கு உகந்த வகையில் முன்னெடுத்துச் செல்வதற்காக, தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்காக மக்கள் காத்திருக்கும் பகுதிகள் மற்றும் தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பிறகு கண்காணிப்பிற்காக 30 நிமிடங்கள் வரை காத்திருக்கும் பகுதிகள் ஆகியவற்றை தனித்தனியே அமைத்து அவர்களுக்கு புத்துணர்ச்சி வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
தடுப்பூசியின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இத்திட்டத்தை பெருமளவு வெற்றி பெறச் செய்வது அரசின் கடமை மட்டுமல்ல என்றும், இதில் பொதுமக்களும் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728794
-----
(Release ID: 1728850)
Visitor Counter : 239