கலாசாரத்துறை அமைச்சகம்
தேசிய இயற்கை மருத்துவக் கழகம், மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் நடத்தும் 100 நாள் யோகா பயிலரங்கு நிகழ்ச்சி
Posted On:
20 JUN 2021 9:53AM by PIB Chennai
புனேவில் உள்ள தேசிய இயற்கை மருத்துவக் கழகம், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்துடன் இணைந்து அதன் வலையொளிப் பக்கத்தில் “பொதுவான யோகா நெறிமுறைகள்” என்ற தலைப்பில் நேரலை யோகா அமர்வுகளை நடத்தி வருகின்றது.
கடந்த மார்ச் 13-ஆம் தேதி தொடங்கிய இந்த 100 நாள் நிகழ்ச்சி, சர்வதேச யோகா தினம் வரை தினமும் காலை 7 மணி முதல் 8 மணி வரை நடைபெறுகிறது.
ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள யோகா நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த இணையதள அமர்வுகள் நடைபெறுகின்றன. இதன்படி 45 நிமிடங்களுக்கு குறிப்பிட்ட வரிசைகளில் யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்படும்.
ஆங்கிலம், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் காணொலிக் காட்சி வாயிலாக நடத்தப்பட்ட இந்த நேரலை யோகா அமர்வுகள், மகாராஷ்டிரா மற்றும் கோவாவின் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம், புனேவின் தேசிய இயற்கை மருத்துவக்கழகம் ஆகியவற்றின் சமூக ஊடக தளங்களிலும் ஒளிபரப்பப்பட்டன. அனைத்து அமர்வுகளையும் அணுக:
https://www.youtube.com/c/MAHAROB/videos
கொவிட்-19 தொற்றுக்கு எதிராக உலகம் போராடும் வேளையில், 7-வது சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படவிருக்கிறது. நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரையை உள்ளடக்கிய முக்கிய நிகழ்ச்சி காலை 6:30 மணி முதல் தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728711
-----
(Release ID: 1728802)
Visitor Counter : 191