புவி அறிவியல் அமைச்சகம்

வட மாநிலங்களில் தென் மேற்கு பருவ காற்று மெதுவாக முன்னேற்றம்: மழை நீடிக்காது

Posted On: 20 JUN 2021 1:49PM by PIB Chennai

வட மாநிலங்களில் தென் மேற்கு பருவ காற்று மெதுவாக முன்னேறும் எனவும், இதனால் நீடித்த மழைக்கு வாய்ப்பில்லை என்றும் இந்திய வானிலை முன்னெச்சரிக்கை மையம் தெரிவிக்கிறது.  அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராஜஸ்தான், மேற்கு உத்தரப் பிரதேசம், ஹரியானா, சண்டிகர், தில்லி மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்றின் முன்னேற்றம் மிக மெதுவாக இருக்கும். இதனால் நீடித்த மழைக்கு வாய்ப்பில்லை.

தென்கிழக்கு உத்தரப் பிரதேசம் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக கிழக்கு உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யலாம். அதன்பின் மழை குறையும்.

மேற்கு பகுதி காற்றின் தாக்கம் காரணமாக உத்தரகாண்ட்டில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யலாம். அதன்பின் மழை குறையும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728746

 


(Release ID: 1728797) Visitor Counter : 127


Read this release in: English , Urdu , Hindi , Punjabi