நிலக்கரி அமைச்சகம்

ஒடிசாவில் உள்ள குராலோய் நிலக்கரி சுரங்கம் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டது

Posted On: 20 JUN 2021 10:26AM by PIB Chennai

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் நிலக்கரித்துறை அமைச்சகம்மேற்கொண்ட    ஏலத்தின் 2வது முயற்சியில்ஒடிசாவில் உள்ள குராலோய் நிலக்கரி சுரங்கம் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டது.

நிலக்கரி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ஆணையம், 38 நிலக்கரி சுரங்கங்களின்  ஏல வடவடிக்கையை தொடங்கியதுமுதல் முயற்சியில், மொத்தம் உள்ள  38 நிலக்கரி சுரங்கங்களில் 19 நிலக்கரி சுரங்கங்கள் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டன

மீதமுள்ள சுரங்கங்களில், 4 சுரங்கங்கள்கூடுதல் தொகைக்கு அதே நிபந்தனைகளுடன்  நிலக்கரி சுரங்கத்தால் இரண்டாவது முயற்சியில்  ஏலம் விடப்பட்டனஇதில்  ஒடிசாவில் உள்ள குராலோய் () வடக்கு சுரங்கம், வேதாந்தா நிறுவனத்தால் வெற்றிகரமாக ஏலம் எடுக்கப்பட்டதுஇதன் மூலம் இந்த சுற்று ஏலத்தில், 38 நிலக்கரி சுரங்களில் 20 சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தின் வெற்றி சதவீதம் 52.63 சதவீதம்.

தற்போது ஏலம் விடப்பட்ட சுரங்கங்களில் குராலோய் () வடக்கு சுரங்கம் மிகப் பெரியது. இதில் ஆண்டுக்கு 8 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்ய முடியும். இது ஆண்டுக்கு ரூ. 763 கோடி வருவாய் ஈட்டும் எனவும், மற்றும் 10,000க்கும் மேற்பட்டோருக்கு வேவைாய்ப்பை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728706

 

-----



(Release ID: 1728767) Visitor Counter : 187