சுற்றுலா அமைச்சகம்

நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சுவாச ஆரோக்கியத்திற்கு யோகா எனும் இணைய கருத்தரங்கை சுற்றுலா அமைச்சகம் நடத்தியது

Posted On: 19 JUN 2021 6:07PM by PIB Chennai

சர்வதேச யோகா தினம் 2021-ஐ கொண்டாடுவதற்காக வாரம் முழுவதற்குமான நிகழ்ச்சிகளை சுற்றுலா அமைச்சகம் மற்றும் அதன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அலுவலகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.

இந்த வருடத்திற்கான மையக்கருவாக ஆயுஷ் அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ள 'யோகாவுடன் இருங்கள் வீட்டில் இருங்கள்' என்பதன் அடிப்படையில் இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஈஷா பவுண்டேஷன் உடன் இணைந்து நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சுவாச ஆரோக்கியத்திற்கு யோகா எனும் இணைய கருத்தரங்கை சுற்றுலா அமைச்சகம் இன்று (2021 ஜூன் 1 9) நடத்தியது. மனித விழிப்புணர்வை அதிகமாக்கி தனிமனித மாற்றத்தின் மூலம் சர்வதேச நல்லிணக்கத்தை ஏற்படுத்த தன்னை அர்ப்பணித்துள்ள ஈஷா பவுண்டேஷனின் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின

வழிகாட்டுதலுடன் இந்த இணைய கருத்தரங்கு தொடங்கியது. யோகாவின் முக்கியத்துவம், அதன் பலன்கள் மற்றும் சிம்ம கிரியா குறித்து அவர் விரிவாக விளக்கினார்.

சர்வதேச யோகா தினமான 2021 ஜூன் 21 அன்று கலாச்சார அமைச்சகம் மற்றும் சுற்றுலா அமைச்சகம் ஆகியவை இணைந்து நாடெங்கிலும் உள்ள 30 இடங்களில் இருந்து யோகா கொண்டாட்டங்களை நேரலையில் நடத்துகின்றன. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு பிரகலாத் சிங் படேல் மற்றும் குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் முன்னிலையில் 2021 ஜூன் 21 அன்று நண்பகல் 12:00 மணிக்கு 'யோகா: வாழ்வின் முறை' எனும் இணைய கருத்தரங்கை சுற்றுலா அமைச்சகம் நடத்துகிறது.

இணையதளத்தில் கலந்து கொள்ள

https://digitalindia-gov.zoom.us/webinar/register/WN_8bYtqL-fSKWjFdtrcuJCwQ எனும் முகவரியில் பதிவு செய்து கொள்ளுங்கள்.

மேலும் விவரங்களுக்கு இன்கிரடிபிள் இந்தியாவை பின்வரும் பக்கங்களில் பின்தொடருங்கள்:

 இன்ஸ்டாகிராம் - https://instagram.com/incredibleindia?igshid=v02srxcbethv

 டிவிட்டர் - https://twitter.com/incredibleindia?s=21

முகநூல் - https://www.facebook.com/incredibleindia/

லிங்க்ட் இன் - https://www.linkedin.com/company/incredibleindia

இணையதளம் - https://www.incredibleindia.org/

யூடியூப் - https://www.youtube.com/channel/UCMxJPchGLE_CJ1MJbJy-xDQ

 ********************



(Release ID: 1728661) Visitor Counter : 202