வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
பஞ்சாபில் ஆக்சிஜன் ஆலைகள் நிறுவுதல் குறித்து செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் புரி உரையாடினார்
Posted On:
18 JUN 2021 7:42PM by PIB Chennai
பி எம் கேர்ஸ் நிதியத்தின் கீழ் பஞ்சாப் மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் ஆலைகள் குறித்த செய்தியாளர் சந்திப்பில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் திரு ஹர்தீப் புரி உரையாடினார்.
41 ஆலைகளை துரிதகதியில் நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் எடுக்குமாறு பஞ்சாப் மாநில அரசுக்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக செயலாளர் திரு துர்கா சங்கர் மிஷ்ரா மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியதாக அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக பஞ்சாப்பிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 13 ஆலைகள் தற்போது நிறுவப்பட்டு வருகின்றன.
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், 2020 அக்டோபரில் 162 ஆக்சிஜன் ஆலைகளும், 2021 மே 10, 2021 மே 10 மற்றும் 2021 மே 22 அன்று முறையே 75, 52 மற்றும் 200 ஆலைகளும் பிஎம் கேர்ஸ் நிதியத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
பஞ்சாப்பில் நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் ஆலைகள் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1728313
*****************
(Release ID: 1728359)