எரிசக்தி அமைச்சகம்
சர்வதேச யோகா தினத்துக்கு தயாராகிறது என்டிபிசி
இடுகை இடப்பட்ட நாள்:
18 JUN 2021 3:15PM by PIB Chennai
சர்வதேச யோகா தினத்தை கொண்டாட தேசிய அனல் மின் நிறுவனம் (என்டிபிசி) தயாராகி வருகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்து அனல் மின் நிலையங்களிலும், முழு வீச்சில் நடக்கின்றன.
மின்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள என்டிபிசி நிறுவன ஊழியர்கள் ஜூன் 21ம் தேதி யோகா விரிப்புகளை கொண்டு வருகின்றனர்.
நேரடி யோகா நிகழ்ச்சிகள், இணைய கருத்தரங்குகள், போட்டிகள், சொற்பொழிவுகள், கருத்தரங்கங்கள், ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு யோகா பயிற்சிகளை கொவிட் தடுப்பு நடவடிக்கைகளுடன் மேற்கொள்ள என்டிபிசி தயாராகி வருகிறது.
யோகா பல ஆண்டுகளாக பிரபலமடைந்து வருகிறது. உடல் மற்றும் மன நலத்தை காப்பதில் யோகா வெற்றிகரமாக உள்ளது. அதன் ஒவ்வொரு செயல்பாடும் உடல் வலிமை, நெகிழ்வு தன்மை, நடுநிலை, இணக்கம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது.
கொவிட்-19 தொற்று மக்களிடையே மன அழுத்தத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உடல் நலத்துடன், உளவியல் பிரச்னைகளையும் யோகாவால் தீர்க்க முடியும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728194
*****************
(வெளியீட்டு அடையாள எண்: 1728263)
வருகையாளர் எண்ணிக்கை : 185