எரிசக்தி அமைச்சகம்

பவர்கிரிட் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் ரூ.12,000 கோடியை தாண்டியது

प्रविष्टि तिथि: 18 JUN 2021 1:46PM by PIB Chennai

மத்திய மின்துறை அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனம் பவர் கிரிட். இந்நிறுவனம் 2021 மார்ச் 31ம் தேதியுடன் முடிந்த கடந்த நிதியாண்டில் மொத்தம் ரூ.40,824 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. வரி செலுத்திய பின் இதன் ஒருங்கிணைந்த லாபம் ரூ.12,036 கோடி.  2019-20ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது முறையே 6 சதவீதம் மற்றும் 9 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. 

முழுமையான அடிப்படையில், இந்நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.40,527 கோடி. மற்றும் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.11,936 கோடி. இதன் மூலம் முந்தைய நிதியாண்டைவிட இந்நிறுவனம் முறையே 6 சதவீதம் மற்றும் 10 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

2020-21ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் மூலதன செலவு ரூ.11,284 கோடி. முதலீட்டு சொத்து மதிப்பு ரூ.21,467 கோடி. பவர்கிரிட் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2,41,498 கோடி. 2019-20ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.2,27,543 கோடியாக இருந்தது. 

முதல் முறையாக பவர் கிரிட் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு 1:3 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க பரிந்துரை செய்துள்ளது.

முதல் மற்றும் இரண்டாவது இடைக்கால ஈவுத் தொகையை விட கூடுதலாக இறுதி ஈவுத் தொகையாக 30 சதவீதம் வழங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ரூ.10 மதிப்புள்ள ஒரு பங்குக்கு ஈவுத் தொகையாக ரூ.3 வழங்கப்படும். 2020-21ம் நிதியாண்டுக்கு, முதல் மற்றும் இரண்டாவது இடைக்கால ஈவுத் தொகையாக 90 சதவீதம், ரூ.10 மதிப்பிள்ள ஒரு பங்குக்கு ரூ.9 ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த நிதியாண்டில், ரூ.10 மதிப்புள்ள ஒரு பங்கின் மொத்த ஈவுத் தொகை மதிப்பு  ரூ.12. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728145

*****************


(रिलीज़ आईडी: 1728201) आगंतुक पटल : 261
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi