சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

2.58 கோடி கொவிட் தடுப்பூசி டோஸ்கள்: மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில்

Posted On: 18 JUN 2021 11:17AM by PIB Chennai

2.58 கோடிக்கும் அதிகமான (2,58,00,405) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன.

மத்திய அரசு இதுவரை, 27.90 கோடிக்கும் அதிகமான (27,90,66,230) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது.

இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 25,32,65,825 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த மூன்று நாட்களில் கூடுதலாக 19,95,770 தடுப்பூசி டோஸ்களை, மத்திய அரசு, மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கவிருக்கிறது.

தாராளமயமாக்கப்பட்ட விலை நிர்ணயம் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட மூன்றாம் கட்ட கொவிட்-19 தடுப்பூசி உத்தி, மே 1 முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த உத்தியின் கீழ் ஒவ்வொரு மாதமும் மத்திய மருந்துகள் ஆய்வகம் அனுமதி அளித்த மொத்த தடுப்பூசிகளில் 50 சதவீதத்தை இந்திய அரசு கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728120

********************


(Release ID: 1728157) Visitor Counter : 236