பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஓய்வூதியர் நலத் துறை ஏற்பாடு செய்த சிறப்பு தடுப்பு மருந்து வழங்கல் முகாமை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பார்வையிட்டார்

Posted On: 17 JUN 2021 6:22PM by PIB Chennai

சாணக்கியபுரியில் உள்ள குடிமை சேவைகள் அலுவலர்கள் நிறுவனத்தில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நல துறையின் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட தடுப்பு மருந்து வழங்கல் முகாமை வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான திரு ஜிதேந்திர சிங் இன்று பார்வையிட்டார்.

இரு வாரங்களில் நடத்தப்படும் இரண்டாவது முகாமான இதில் 18 வயது முதல் 44 வயது வரையிலான தகுதியுடைய அனைவருக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அனைத்து பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு தடுப்பு மருந்து வழங்குவதற்கான இலக்கை எட்ட பல தடுப்பூசி முகாம்களை பணியாளர், பொது மக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகம் ஏற்பாடு செய்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

நோய் பரவலை தடுத்து சமூக இடைவெளியை உறுதி செய்வதற்காக திறந்தவெளி தோட்டத்தில் நடத்தப்பட்ட இன்றைய முகாமில் சுமார் 150 பேருக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். இதற்கு முன் இம்மாதத்தில் நடைபெற்ற முகாமில் 45 வயதுக்கு மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.

தகுதியுள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் விரைந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட அமைச்சர், நேரத்தை வீணாக்காமல் அலுவலர்கள் தடுப்பு மருந்தை பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727957

-----



(Release ID: 1728009) Visitor Counter : 204