உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

மும்பை ஐஎன்எஸ் ஹாம்லா தளத்தின் அருகே மரபுசாரா விமானங்கள் பறப்பதற்குத் தடை

இடுகை இடப்பட்ட நாள்: 16 JUN 2021 1:48PM by PIB Chennai

மும்பையில் உள்ள பாதுகாப்பு மையமான ஐஎன்எஸ் ஹாம்லாவிலிருந்து (மார்வே சாலை, மலாத்) 3 கிலோமீட்டர் தொலைவிற்குள் மரபுசாரா விமானங்கள் (ட்ரோன்கள்/ ஆளில்லா விமானங்கள்) பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறிப் பறக்கும் மரபுசாரா விமானங்கள் அழிக்கப்படும்/ கையகப்படுத்தப்படும்.

மேலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 121, 121, 287, 336, 337 மற்றும் 338 ஆகிய பிரிவுகளின் கீழ் விமானத்தை இயக்குபவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

ட்ரோன்களை அவசியம் இயக்க வேண்டுமானால்டிஜி ஸ்கை இணையதளம் வாயிலாக சிவில் விமான தலைமை இயக்குநரிடம் அனுமதி பெற்று, அனுமதி கடிதத்தின் நகலை விமானத்தை இயக்குவதிலிருந்து குறைந்தது ஒரு வாரம் முன்பு ஐஎன்எஸ் ஹாம்லா தளத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727478

 

------


(வெளியீட்டு அடையாள எண்: 1727684) வருகையாளர் எண்ணிக்கை : 213
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी