பாதுகாப்பு அமைச்சகம்

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வெளிப்படையான மற்றும் அனைத்தும் உள்ளடங்கிய ஒழுங்குமுறை தேவை: 8வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

Posted On: 16 JUN 2021 1:15PM by PIB Chennai

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வெளிப்படையான மற்றும் அனைத்தும் உள்ளடங்கிய ஒழுங்குமுறை தேவை என 8வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் (ஏடிடிஎம் பிளஸ்)   திரு ராஜ்நாத் சிங் இன்று பேசினார்

தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பில் உள்ள 10 ஆசியான் நாடுகள்மற்றும் பேச்சுவார்த்தைக்கான பங்குதார நாடுகளான ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, தென் கொரியா, புரூனே, ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்கும் ஆண்டு கூட்டம்தான் இதுவாகும் (ஏடிடிஎம் பிளஸ்).  இதற்கு இந்தாண்டு புரூனே தலைமை வகித்தது.

இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசியதாவது:

நாடுகளின் இறையான்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்கும் வெளிப்படையான,   அனைத்தும் உள்ளடங்கிய ஒழுங்குமுறை தேவை. சர்வதே விதிமுறைகள் மற்றும் சட்டங்களை பின்பற்றுவதில் பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வுகள் காண வேண்டும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்த, தொலைநோக்குகள் மற்றும் மதிப்புகள் அடிப்படையில் கூட்டுறவு செயல்பாடுகளை இந்தியா வலுப்படுத்தியுள்ளது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக நமது பகிரப்பட்ட தொலைநோக்கு திட்டங்களை அமல்படுத்த, ஆசியான்  அமைப்பை பயன்படுத்த இந்தியா ஆதரவு தெரிவிக்கிறது.

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு எதிராக உருவாகிவரும் சவால்களை, பழமையான முறைகளால் தீர்க்க முடியாதுகடல் சட்டங்களுக்கான .நா ஒப்பந்தப்படி, சர்வதேச கடல் பகுதிகளில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, தடையற்ற வணிகம் ஆகியவற்றை இந்தியா ஆதரிக்கிறது.  

கடல்சார் பாதுகாப்பு சவால்கள் இந்தியாவுக்கு கவலையளிக்க கூடியதாக உள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் அமைதி, நிலைத்தன்மை, செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு கடல்வழி தகவல் தொடர்பு அமைப்புகள் முக்கியம்பேச்சுவார்த்தைக்கான நடத்தை விதிமுறைகள், சர்வதேச சட்டத்தின்படி விளைவுகளை ஏற்படுத்த வழிவகுக்கும். இந்த அமைப்பில் இல்லாத நாடுகளின் சட்ட உரிமைகள் மற்றும் நலன்கள் பற்றி தப்பான எண்ணத்தை ஏற்படுத்தாது.

உலக அமைதிக்கு தீவிரவாதமும், பயங்கரவாதமும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. இந்த அமைப்புகளை ஒழிக்க கூட்டு ஒத்துழைப்பு நடவடிக்கை தேவை. இதற்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு அவர்களை பொறுப்பேற்கச் செய்து, அவர்களுக்கு நிதியுதவி மற்றும் அடைக்கலம் அளிப்பவர்களுக்கு எதிராக  கடும் நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும். தீவிரவாதத்துக்கு நிதி அளிப்பதை எதிர்த்து போராடுவதில், நிதி நடவடிக்கை குழு (FATF),  உறுப்பினரான இந்தியா உறுதியாக உள்ளது.

இவ்வாறு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பேசினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727467

 

-----(Release ID: 1727554) Visitor Counter : 29