பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
கொவிட் தடுப்பூசி போடுவதில், உலகிலேயே வேகமான நாடாக இந்தியா உள்ளது: டாக்டர் ஜித்தேந்திர சிங் தகவல்
Posted On:
15 JUN 2021 5:12PM by PIB Chennai
கொவிட் தடுப்பூசி போடுவதில், உலகிலேயே வேகமான நாடாக இந்தியா உள்ளது என மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்.
தில்லியில் உள்ள மத்திய செயலகத்தின் நார்த் பிளாக் பகுதியில் மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சிதுறை ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி முகாம் இன்று நடத்தப்பட்டது. இதை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் பார்வையிட்டார்.
அப்போது தகுதியான குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சிதுறை ஊழியர்களின் சவுகரியத்துக்காக இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். இதேபோன்ற கொவிட் தடுப்பூசி முகாம்களை மத்திய அரசின் மற்ற துறைகளும், அமைச்சகங்களும் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார். கொவிட் தடுப்பூசி போடுவதில், உலகிலேயே வேகமான நாடாக இந்தியா உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727254
----
(Release ID: 1727353)