அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

மூடு பனியின்போது உருவமாக்குவதை மேம்படுத்துவதற்கான புதிய முறை: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

Posted On: 15 JUN 2021 1:10PM by PIB Chennai

மூடுபனி சூழ்ந்த வானிலை தருணங்களில் இனி பொருட்களைத் தெளிவாக  உருவமாக்கலாம். இது போன்ற நாட்களில் எடுக்கப்படும் படங்களை மேம்படுத்துவதற்கான வழியை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஒளியின் ஆதாரத்தைப் பண்படுத்தி, காண்பவரிடம் அதனைப் பிரித்து வழங்கும் வகையில் இந்தத் தொழில்நுட்பம் அமைந்துள்ளது.

படங்களின் தரத்தை எளிதாக மேம்படுத்துவதற்கான தீர்வை ஆராய்ச்சியாளர் குழு அளித்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் பெங்களூருவில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனம்; விண்வெளி செயல்பாடுகள் மையம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், அகமதாபாத்; ஷிவ் நாடார் பல்கலைக்கழகம், கௌதம் புத்தா நகர் மற்றும் பிரான்சின் ரென்னெஸ், பாரிஸ்-சாக்லே ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த குழுவினர் இந்தப் புதிய முறையில் துல்லியமான படங்களை உருவாக்கியுள்ளனர். ஓஎஸ்ஏ கான்டினம்என்ற பத்திரிகையில் இந்த ஆராய்ச்சி குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின்  கௌதம புத்தா நகரிலுள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில் மூடுபனி நிறைந்த குளிர் காலத்தின் காலை பொழுதுகளில், பல விரிவான ஆராய்ச்சிகள் செய்து, இந்த முறையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். 10 சிகப்பு எல்இடி விளக்குகளை ஒளியின் ஆதாரமாக அவர்கள் தேர்வு செய்தனர். பிறகு எல்இடி விளக்குகளின் வாயிலாகப் பரவும் மின்சாரத்தின் போக்கை ஒரு வினாடிக்கு 15 சுழற்சிகள் என்ற வீதத்தில் மாற்றியமைத்து ஒளியின் ஆதாரத்தை அவர்கள் பண்படுத்தினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727176

                                                                                                                                       ------



(Release ID: 1727229) Visitor Counter : 186