வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

புவியியல் குறியீட்டு சான்றிதழ் பெற்ற ஜர்தாலு மாம்பழங்கள் பிகாரில் இருந்து இங்கிலாந்துக்கு வர்த்தக ரீதியில் முதல் முறையாக ஏற்றுமதி செய்யப்பட்டது

Posted On: 14 JUN 2021 5:39PM by PIB Chennai

கிழக்கு பிராந்தியத்தின் வேளாண் ஏற்றுமதிகளுக்கு மிகப்பெரிய ஊக்கமளிக்கும் விதமாக, புவியியல் குறியீட்டு சான்றிதழ் பெற்ற ஜர்தாலு மாம்பழங்கள் பிகாரில் இருந்து இங்கிலாந்துக்கு வர்த்தக ரீதியில் முதல் முறையாக இன்று ஏற்றுமதி செய்யப்பட்டது.

லக்னோவில் உள்ள அபேடாவின் பேக்கிங் மையத்தில் இருந்து பிகார் அரசு, இந்திய தூதரகம் மற்றும் இன்வெஸ்ட் இந்தியாவுடன் இணைந்து சாறு மற்றும் வாசனை மிக்க மாம்பழங்களை இங்கிலாந்துக்கு அபேடா அனுப்பியது.

சிறந்த சுவை மற்றும் வாசனை கொண்ட ஜர்தாலு மாம்பழங்கள் 2018-ல் புவியியல் குறியீட்டை பெற்றன.

மாம்பழங்களின் ஏற்றுமதிகளுக்காக வாங்குவோர்-விற்போர் காணொலி கூட்டங்கள் மற்றும் திருவிழாக்களை அபேடா நடத்தி வருகிறது. இந்திய தூதரகங்களுடன் இணைந்து ஜெர்மனியில் உள்ள பெர்லின் மற்றும் ஜப்பானில் மாம்பழ திருவிழாக்களை அபேடா சமீபத்தில் நடத்தியது.

சியோலில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்திய வர்த்தக சங்கம், கொரியா ஆகியவற்றுடன் இணைந்து காணொலி வாங்குவோர்-விற்போர் கூட்டத்தை 2021 மே மாதத்தில் அபேடா நடத்தியது. கொவிட்-19 காரணமாக இந்த நிகழ்ச்சிகளை நேரடியாக நடத்த முடியவில்லை.

புவியியல் குறியீட்டு சான்றிதழ் பெற்ற பங்கனப்பள்ளி மற்றும் சுர்வர்ணரேகா மாம்பழங்களை ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மற்றும் சித்தூர் மாவட்டங்களில் இருந்து சமீபத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டது.

பழங்களின் அரசன் மற்றும் கற்பகவிருட்சம் என்றழைக்கப்படும் மாம்பழம், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் அதிகளவில் விளைகிறது.

தனது மையங்களில் மாம்பழங்களை பதப்படுத்தி, மத்திய கிழக்கு, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கு மாம்பழங்களை அபேடா ஏற்றுமதி செய்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1726999

*****************



(Release ID: 1727018) Visitor Counter : 253


Read this release in: English , Urdu , Hindi , Punjabi