அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
செயற்கை நுண்ணறிவு கொண்ட தொடர்பில்லா உடல்நல கண்காணிப்பு கருவியை உயிரிதொழில்நுட்ப துறை நிதியுதவி பெற்ற ஸ்டார்ட் அப் உருவாக்கியுள்ளது
Posted On:
14 JUN 2021 4:09PM by PIB Chennai
சாதாரண படுக்கையில் இருக்கும் நோயாளிகளின் உடல்நிலையை அவர்களோடு நேரடி தொடர்பில்லாமல் அளவிடக்கூடிய கருவியை உயிரிதொழில்நுட்ப துறை மற்றும் அதன் பொதுத்துறை நிறுவனமான பிராக் நிதியுதவி பெற்ற புது நிறுவனமான (ஸ்டார்ட் அப்) டோசீ உருவாக்கியுள்ளது.
நாட்டில் உள்ள 35 மாவட்டங்களில் 4,000-க்கும் மேற்பட்ட மருத்துவமனை படுக்கைகளை தீவிர சிகிச்சை பிரிவுக்கு சற்றே குறைவானவையாக இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே மேம்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களில் 30,000-க்கும் அதிகமான நோயாளிகளுக்கு சேவையளித்து, 65,000-க்கும் அதிகமான மருத்துவ சேவை நேரத்தை மிச்சப்படுத்தியதோடு, தனது முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்பின் மூலம் சரியான நேரத்தில் 750 தீவிர சிகிச்சை பிரிவு மாறுதல்களுக்கு டோசீ உதவியுள்ளது.
படுக்கையின் கீழ் வைக்கப்படும் இக்கருவியானது, இதய துடிப்பு மற்றும் சுவாச அளவுகளை பதிவு செய்து, செயற்கை நுண்ணறிவின் மூலம் இதயத் துடிப்பு அளவு, சுவாச அளவு மற்றும் இரத்த அழுத்த அளவு ஆகியவற்றின் தரவுகளாக 98.4 சதவீத துல்லியத்துடன் மாற்றுகிறது. ஆக்சிஜன் மற்றும் ஈசிஜி அளவுகளையும் உபகரணங்களின் உதவியோடு இது பதிவு செய்கிறது. திறன்பேசி செயலி ஒன்றின் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் தகவல்களை பார்க்க முடிவதோடு, மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு முறையின் மூலமாகவும் கண்காணிக்க முடியும்.
உடல் நிலை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை அளிப்பதால், மருத்துவ பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்து, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை தரத்தை இது மேம்படுத்துகிறது. ஒயர்கள் மற்றும் இதர கருவிகளின் அசவுகரியம் இல்லாமல் தீவிர சிகிச்சை பிரிவு தரத்திலான கண்காணிப்பை இந்த தொழில்நுட்பம் வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1726974
*****************
(Release ID: 1726997)
Visitor Counter : 277