ஜல்சக்தி அமைச்சகம்

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் உத்தரப் பிரதேசத்திற்கு ரூ. 10,870 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு

Posted On: 12 JUN 2021 6:04PM by PIB Chennai

ஒவ்வொரு வீட்டிற்கும் தூய்மையான குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையில் ஜல் ஜீவன் இயக்கத்தை செயல்படுத்துவதற்காக உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு  ரூ. 10,870.50 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. கடந்த 2019-20 ஆம் ஆண்டு இந்த மாநிலத்திற்கு ரூ. 1206 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில்,  2020-21-ஆம் ஆண்டில் இந்தத் தொகை ரூ. 2571 கோடியாக உயர்த்தப்பட்டது. எனவே 2021-22 ஆம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை 4 மடங்கு அதிகமாகும்.

உத்தரப்பிரதேச முதல்வருடன் நடைபெற்ற கூட்டத்தின் போது மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், அந்த மாநிலத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்குத் தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதிபடத் தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்தவாறு உத்தரப்பிரதேசத்தில் ஒவ்வொரு ஊரக வீட்டிற்கும் 2024-ஆம் ஆண்டிற்குள் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் உறுதி அளித்தார்.

உத்திரபிரதேசத்தின் 97 ஆயிரம் கிராமங்களில் உள்ள 2.63 கோடி வீடுகளில் இதுவரை 30.04 லட்சம் (11.3%) வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன்பு இந்த மாநிலத்தில் 5.16 லட்சம் (1.96%) வீடுகள் மட்டுமே குடிநீர் குழாய் இணைப்புகளைப் பெற்றிருந்தன. கடந்த 21 மாதங்களில் இந்த இயக்கத்தின் கீழ் 24.89 லட்சம் (9.45%) வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டன. இன்னும் சுமார் 2.33 கோடி வீடுகளுக்குத் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படவில்லை.

உத்தரப்பிரதேச முதல்வருக்கு மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் எழுதியுள்ள கடிதத்தில், இந்த ஆண்டுக்குள் அந்த மாநிலத்தில் 78 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். குடிநீர் விநியோகத் திட்டங்களுக்கான ஆரம்பகட்ட பணிகளை 60 ஆயிரம் கிராமங்களில் இந்த ஆண்டு தொடங்குமாறும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1726585

----



(Release ID: 1726640) Visitor Counter : 202


Read this release in: Hindi , English , Urdu , Telugu