புவி அறிவியல் அமைச்சகம்

மத்தியப் பிரதேசத்தில் மேலும் சில பகுதிகள், சத்தீஸ்கர், ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட் மற்றும் பிகாரின் எஞ்சியப் பகுதிகள் மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் சாதகமாக உள்ளன

Posted On: 12 JUN 2021 6:28PM by PIB Chennai

இந்திய வானிலை துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் படி:

குறிப்பிடத்தகுந்த வானிலை அம்சங்கள்:

வடமேற்கு வங்காள விரிகுடாவின் எஞ்சியப் பகுதிகள், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் பிகாரின் சில பகுதிகள் மற்றும் மேற்கு வங்கத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேற்றம் அடைந்துள்ளது

மத்தியப் பிரதேசத்தில் மேலும் சில பகுதிகள், சத்தீஸ்கர், ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட் மற்றும் பிகாரின் எஞ்சியப் பகுதிகள் மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் சாதகமாக உள்ளன.

வடமேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் அருகிலுள்ள மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசாவின் கடற்கரையோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது நிலை கொண்டுள்ளது.

அது இன்னும் தீவிரமடைந்து அடுத்த 2-3 தினங்களில் மேற்கு-வடமேற்கு திசையில் ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் வடக்கு சத்தீஸ்கரை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக, ஒடிசா, சத்தீஸ்கர், கிழக்கு மத்தியப் பிரதேசம், விதர்பா, தெலங்கானாவில் அடுத்த 3-4 நாட்களுக்கு கனமானது முதல் மிக கன மழை வரை பெய்யக்கூடும்.

மேற்கு வங்கம், சிக்கிம், பிகார், ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் அடுத்த 4-5 நாட்களுக்கு அதிக மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்யக்கூடும்.

மகாராஷ்டிரா மற்றும் கோவாவின் கடலோர மற்றும் அருகிலுள்ள மலை மாவட்டங்களிலும், கர்நாடகாவிலும் அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிக முதல் மிக கன மழை வரை பெய்யக்கூடும்.

ஜூன் 12 முதல் 15 வரை கொன்கன் மற்றும் கோவாவின் சில இடங்களில் மிக கன மழையும், ஜூன் 14 மற்றும் 15 ஆகிய நாட்களில் மத்தியப் பிரதேசத்தில் மிக கன மழையும், ஜூன் 12 முதல் 15 வரை கேரளாவின் சில பகுதிகளில் மிக கன மழையும் பெய்யக்கூடும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1726594

-------



(Release ID: 1726631) Visitor Counter : 141


Read this release in: English , Urdu , Hindi