பாதுகாப்பு அமைச்சகம்

கயா ராணுவப் பயிற்சி மையத்தில் 89 வீரர்கள் பயிற்சியை நிறைவு செய்தனர்

Posted On: 12 JUN 2021 2:36PM by PIB Chennai

பிகார் மாநிலம் கயாவில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் 89 வீரர்கள் (20 சிறப்பு அதிகாரிகள்-46 படிப்புகள், தொழில்நுட்ப நுழைவு திட்டத்தைச் சேர்ந்த 60 வீரர்கள்- 43 படிப்புகள் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த 9 பேர்) இன்று (ஜூன் 12, 2021) பயிற்சி நிறைவு செய்து கொவிட் நெறிமுறைகளுக்கு உட்பட்டு அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

செகந்திராபாத்தில் உள்ள மின்னணு மற்றும் இயந்திர பொறியியல் ராணுவக் கல்லூரியின் பயிற்சிப் பிரிவு, மௌவில் உள்ள தொலைத்தொடர்பு பொறியியல் ராணுவக் கல்லூரி, புனேவில் உள்ள ராணுவப் பொறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் தொழில்நுட்ப நுழைவு திட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பட்டப்படிப்பை மேற்கொள்வார்கள்.

கயா ராணுவப் பயிற்சி மையத்தின் படைத்தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜி வி ரெட்டி, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, பயிற்சியின் போது சிறப்பாக செயல்பட்ட ராணுவ வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.

சிறந்த அணிவகுப்பு மரியாதையை வழங்கிய வீரர்களைப் பாராட்டிய படைத்தலைவர், சுயநலம் இல்லாத அர்ப்பணிப்புடனான நிபுணத்துவம் வாய்ந்த தங்களது சேவையின் மூலம் நாட்டிற்கும் தாங்கள் பயிற்சி பெற்ற மையத்திற்கும் பெருமை சேர்க்குமாறு அதிகாரிகளைக்  கேட்டுக் கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1726506

------



(Release ID: 1726564) Visitor Counter : 164


Read this release in: Urdu , English , Punjabi , Hindi