அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கடல்சார் புவியியல் இடர்பாடுகளை தடுக்க முப்பரிமாண நில அதிர்வு தரவுகள் உதவும்

Posted On: 11 JUN 2021 4:19PM by PIB Chennai

புவியியல் இடர்பாடுகளுக்கான சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்தும் வகையில் கடல்சார் படிமங்கள் கடலின் அடிப்பாகத்தில் நகர்கின்றன. கடல்சார் படிமங்களின் அடிப்புறம் மற்றும் நியூசிலாந்தில் உள்ள வடக்கு தரனாகி படுகையின் கடல்பரப்புக்கும் இடையேயான தொடர்பு குறித்து அறிந்து கொள்ள முப்பரிமாண நில அதிர்வு தரவுகளை விஞ்ஞானிகள் தற்போது பயன்படுத்தியுள்ளனர்.

கடல்பரப்பு நிலையற்று இருக்கும் போதும், தரையில் இருந்து கடலின் அடிப்புறத்திற்கு கடல்சார் படிமங்கள் செல்வதை தாங்க முடியாத போதும் கடல்சார் புவியியல் இடர்பாடுகள் ஏற்படுகின்றன.

கடல்சார் படிமங்களின் அடிப்புறம் மற்றும் கடல்பரப்புக்கும் இடையேயான தொடர்பு குறித்து அறிந்து கொள்வதன் மூலம் பல்வேறு கடல்சார் இடர்களை தடுக்க முடியும்.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற நிறுவனமான வாடியா இமாலய புவியியல் நிறுவனம் மற்றும் நார்வே மற்றும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த முப்பரிமாண நில அதிர்வு தரவுகள் ஆய்வில் ஈடுபட்டனர்.

பேராசிரியர் கலாசந்த் சைன் தலைமையிலான இந்த ஆராய்ச்சி பேசின் ரிசெர்ச்எனும் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

வெளியீட்டு இணைப்பு: https://doi.org/10.1111/bre.12560

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1726247

*****************



(Release ID: 1726297) Visitor Counter : 262


Read this release in: English , Urdu , Hindi , Punjabi