அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
3 என் எம்முக்கு குறைவாக உள்ள தூசுப்படல பொருட்கள் பருவநிலை பாதிப்புகளை ஏற்படுத்தும் அளவுக்கு வளர்ந்து இந்தியாவின் நகர் பகுதிகளில் அடிக்கடி உருவாகின்றன
Posted On:
11 JUN 2021 4:14PM by PIB Chennai
இந்தியாவில் உள்ள நகர் பகுதி ஒன்றில் 3 நானோமீட்டர்களுக்கும் சிறிய அளவிலான தூசுப்படல பொருட்களை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள், அவை அடிக்கடி உருவாவதைக் கண்டறிந்துள்ளனர்.
பருவநிலை பாதிப்புகளை ஏற்படுத்தும் அளவுக்கு இவை அடிக்கடி உருவாகின்றன என்றும் அவர்கள் கண்டறிந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், இந்தியாவின் பகுதி ஒன்றில் 3 நானோமீட்டர்களுக்கும் சிறிய அளவிலான தூசுப்படல பொருட்களை முதல் முறையாக ஆய்வு செய்துள்ளனர். ஏர்மாடஸ் நானோ கன்டென்சேஷன் நியூகிளியஸ் கவுன்டர் எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 1 முதல் 3 3 நானோமீட்டர் அளவிலான தூசுப்படல பொருட்களை டாக்டர் விஜய் கனவாடே மற்றும் திரு மேத்யூ செபாஸ்டியன் அளந்துள்ளனர்.
பருவநிலை மாற்ற திட்டப் பிரிவின் கீழ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆதரவு பெற்ற இந்த ஆய்வை 2019 ஜனவரி முதல் ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் அவர்கள் மேற்கொண்டு, சிறிய மூலக்கூறு குழுக்கள் உருவாவதை கண்டறிந்துள்ளனர்.
‘அட்மாஸ்ஃபெரிக் என்விரான்மென்ட்’ எனும் சஞ்சிகையில் இவர்கள் ஆய்வு வெளியாகியுள்ளது.
வெளியீட்டு இணைப்பு
https://doi.org/10.1016/j.atmosenv.2021.118460
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1726241
*****************
(Release ID: 1726284)
Visitor Counter : 198