புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
ரூ.4,500 கோடி மதிப்பிலான சூரிய மின்சக்தி உற்பத்தி மையங்கள் அமைப்பதற்கான ஏலம்: விண்ணப்பங்களை வரவேற்கிறது ஐஆர்இடிஏ
Posted On:
11 JUN 2021 1:27PM by PIB Chennai
ரூ.4.500 கோடி மதிப்பிலான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் சூரிய மின்சக்தி உற்பத்தி மையங்கள் அமைப்பதற்கு, சூரிய மின்சக்தி கருவிகள் தயாரிப்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை((IREDA) வரவேற்கிறது.
இது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமாகும். இத்திட்டத்தை அமல்படுத்தும் நிறுவனமாக ஐஆர்இடிஏ-வை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் நியமித்துள்ளது. சூரிய மின்சக்தி உற்பத்தி கருவிகளை உள்நாட்டில் தயாரிப்பதை ஊக்குவிக்க, ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த ஏலத்துக்கு விண்ணப்பிக்க ஜூன் 30ம் தேதி கடைசி நாளாகும்.
ஏலத்தில் வெற்றி பெறுபவர்களை தேர்வு செய்யும் நடைமுறை ஜூலை 30ம் தேதிக்குள் முடிவடையும். இந்த ஏலத்துக்கான விண்ணப்பத்தை ஐஆர்இடிஏ தனது இணையளத்தில் கடந்த மே 25ம் தேதி வெளியிட்டது.
மின்னணு விண்ணப்ப நடைமுறை மே 31ம் தேதி வரை இருந்தது.
இதற்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள், தங்கள் உற்பத்தி மையத்தை புதிய இடத்திலோ அல்லது ஏற்கனவே வர்த்தக பயன்பாட்டில் இருந்த இடத்திலோ அமைக்கலாம். ஆனால் இத்திட்டத்தை புதிய மற்றும் பழைய இடத்தை இணைத்து தொடங்க கூடாது. ஏலத்துக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதிக்கு முன்பாக மூலதனப் பொருட்களை இறக்குமதி செய்த நிறுவனங்கள், உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பங்கேற்க தகுதியில்லை. சூரிய மின்சக்தி உற்பத்தி மையம் அமைப்பதற்கான குறைந்தபட்ச திறன் 1,000 மெகா வாட். ஒவ்வொரு ஆண்டும் ஏலத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டம் 5 ஆண்டு காலத்துக்கு வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1726184
*****************
(Release ID: 1726237)
Visitor Counter : 196