சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, நீதிபதி திரு சஞ்சய் யாதவ் நியமனம்

Posted On: 10 JUN 2021 6:18PM by PIB Chennai

இந்திய அரசியலமைப்பு சட்டம் 217-வது பிரிவின் 1-ம் உட்கூறு தமக்களித்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, நீதிபதி திரு சஞ்சய் யாதவை குடியரசுத் தலைவர் நியமனம் செய்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நீதி துறை இன்று வெளியிட்டுள்ளது.

25.08.1986-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு பெற்ற நீதிபதி திரு சஞ்சய் யாதவ், சிவில், அரசமைப்பு, தொழிலாளர் மற்றும் சேவைகள் தொடர்பான  வழக்குகளில் 20 ஆண்டுகளாக ஜபல்பூரில் வாதாடியுள்ளார். தொழிலாளர் மற்றும் சேவைகள் தொடர்பானவற்றில் அவர் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.

1999 மார்ச் முதல் 2005 அக்டோபர் வரை அரசு வழக்கறிஞராக அவர் பணியாற்றியுள்ளார். 2005 அக்டோபர் முதல் துணை தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார்.

மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக 2007 மார்ச் 2 அன்றும், நிரந்தர நீதிபதியாக 2010 ஜனவரி 15 அன்றும் அவர் நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக 2021 ஏப்ரல் 14 அன்று அவர் நியமிக்கப்பட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1726008

 

------



(Release ID: 1726072) Visitor Counter : 169


Read this release in: English , Urdu , Hindi , Telugu