ஜல்சக்தி அமைச்சகம்
மகாராஷ்டிராவில் உள்ள கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்குவதற்கு ரூ 7,064 கோடியை ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது
Posted On:
10 JUN 2021 4:59PM by PIB Chennai
ஒவ்வொரு வீட்டுக்கும் தூய்மையான நீரை குழாய் மூலம் வழங்க வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியத்தை நிறைவேற்றும் விதமாக, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மகாராஷ்டிராவுக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டை ரூ 7,064.41 கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 2020-21-ல் இது ரூ 1,828.92 கோடியாக இருந்தது.
இந்த நான்கு மடங்கு உயர்வுக்கு ஒப்புதல் அளித்த ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத், 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு வழங்குவதற்கான முழு ஆதரவும் மாநில அரசுக்கு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
மகாராஷ்டிராவின் கிராமப்புறங்களில் உள்ள 142 லட்சம் வீடுகளில், 91.30 லட்சம் வீடுகளுக்கு (64.14%) குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு விட்டன. 2019-ல் இத்திட்டம் தொடங்கப்படும் போது, வெறும் 48.43 லட்சம் (34.02%) வீடுகளுக்கு மட்டுமே குழாய் இணைப்புகள் இருந்தன.
வெறும் 21 மாதங்களில் 42.86 லட்சம் வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 2021-22-ல் 27.45 லட்சம் வீடுகளுக்கும், 2022-23-ல் 18.72 லட்சம் வீடுகளுக்கும், 2023-24-ல் 5.14 லட்சம் வீடுகளுக்கும் குழாய் இணைப்புகளை வழங்கி அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் இணைப்புகளை வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725976
-----
(Release ID: 1726060)
Visitor Counter : 206