எரிசக்தி அமைச்சகம்

மருத்துவ சேவையை நோக்கிய இந்திய எரிசக்தித் தொகுப்புக் கழகத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு முன்முயற்சி

प्रविष्टि तिथि: 10 JUN 2021 5:14PM by PIB Chennai

மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் மகாரத்னா பொதுத்துறை நிறுவனமாக இயங்கும் இந்திய எரிசக்தித் தொகுப்புக் கழகம், நாட்டின் வளர்ச்சிக்காக இந்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்குத் தனது பெருநிறுவன சமூக பொறுப்பின் வாயிலாக நிலையான ஆதரவளிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

பெருநிறுவன சமூகப் பொறுப்பு முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய எரிசக்தித் தொகுப்புக் கழகத்தின் வட மண்டலத்திற்கான (II) நிர்வாக இயக்குநர் திரு கைலாஷ் ரத்தோர், பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தின் மல்லன்வாலா மற்றும் கசோவன்னாவில் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

ரூ. 3.22 கோடி மதிப்பில் இந்த ஆரம்ப சுகாதார மையங்கள் கட்டப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் வாயிலாக ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். கூடுதல் அறைகள் உருவாக்கப்படுவதால் அதிக நோயாளிகள் சிகிச்சை பெரும் வாய்ப்பு உருவாவதுடன், அடிப்படை  சுகாதார வசதிகளும் மேம்படும்.

முன்னதாக, ஃபெரோஸ்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கு இந்திய எரிசக்தி தொகுப்பு கழகம் 3 அவசர சிகிச்சை ஊர்திகளை வழங்கியது. மேலும், 217 அரசு நடுநிலை, மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் 282 சானிட்டரி நாப்கின் இயந்திரங்களையும், அதே எண்ணிக்கையில் அவற்றை எரிக்கும் இயந்திரங்களையும் இந்த நிறுவனம் அளித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725980

 

-----


(रिलीज़ आईडी: 1726053) आगंतुक पटल : 249
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi