இந்திய போட்டிகள் ஆணையம்

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்டின் சில பங்குகளை திங்க் & லேர்ன் பிரைவேட் லிமிடெட் (பைஜு’ஸ்) வாங்குவதற்கும், அதன் பின்னர் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் மற்றும் பைஜு’ஸ்-ன் இணைப்பிற்கும் சிசிஐ ஒப்புதல்

Posted On: 08 JUN 2021 5:44PM by PIB Chennai

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்டின் சில பங்குகளை திங்க் & லேர்ன் பிரைவேட் லிமிடெட் (பைஜுஸ்) வாங்குவதற்கும், அதன் பின்னர் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் மற்றும் பைஜுஸ்-ன் இணைப்பிற்கும் இந்திய போட்டியியல் ஆணையகம் (சி்சிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.  

போட்டியியல் சட்டம், 2002-இன் 31(1)-ஆம் பிரிவின் படி இந்த ஒப்புதல் இன்று அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் மற்றும் பைஜுஸ் நிறுவனங்கள் இணைக்கப்பட்டு, பைஜுஸ் தொடர்ந்து செயல்படும். அதாவது, ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ்-ன் மொத்த கட்டுப்பாட்டையும் பைஜுஸ் எடுத்து கொள்ளும்.

இந்தியாவில் நிறுவப்பட்ட தனியார் நிறுவனமான பைஜுஸ், இணையவழி கல்வி சேவைகளை நேரடியாகவும், அதன் துணை நிறுவனங்கள் மூலமாகவும் வழங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725363

*****************


(Release ID: 1725401) Visitor Counter : 208


Read this release in: English , Urdu , Hindi , Telugu