நித்தி ஆயோக்

112 மாவட்டங்களில், கொவிட் பாதுகாப்புத் திட்டம்: நிதி ஆயோக் மற்றும் பிரமல் அறக்கட்டளை தொடக்கம்

Posted On: 08 JUN 2021 3:40PM by PIB Chennai

அறிகுறியற்ற மற்றும் மிதமான கொவிட் பாதிப்புள்ள நோயாளிகளுக்கு, வீட்டுக்குச் சென்று பராமரிப்பு உதவிகளை அளிப்பதில் மாவட்ட நிர்வாகத்துக்கு உதவ சுரக்‌ஷித் ஹம் சுரக்‌ஷித் தும்’ (எங்களுக்கும் பாதுகாப்பு, உங்களுக்கும் பாதுகாப்புஎன்ற திட்டத்தை 112 இலக்கு மாவட்டங்களில் நிதி ஆயோக் மற்றும் பிரமல் அறக்கட்டளை இன்று தொடங்கியது.

மாவட்ட நிர்வாகத்துடன் கூட்டாக மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தில் உள்ளூர் தலைவர்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் தொண்டர்கள், ஆகியோர் இணைந்து இலக்கு மாவட்டங்களில் எழும் கொவிட் தொடர்பான பிரச்னைகளில் கவனம் செலுத்துவர்.

இந்த கொவிட் பாதுகாப்புத் திட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில், 1000 உள்ளூர் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஒரு லட்சம் தொண்டர்களுக்கு, தொலைபேசி மூலம் கொவிட் நோயாளிகளுடன் இணைப்பில் இருப்பது  குறித்து பயிற்சி அளிக்கும். தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொண்டர்களுக்கு பயிற்சி அளிப்பதில் உதவ, பிரமல் அறக்கட்டளை மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து பணியாற்றும். 

இந்தத் திட்டம் தொடக்கம் குறித்து நிதி ஆயோக் தலைவர் திரு அபிதாப்காந்த் ‘‘இலக்கு மாவட்டங்களில் நீடிக்கும் கொவிட் பாதிப்புக்கு தீர்வு காண்பதில், ஏழைகளின் தேவைகளுக்கு உதவி அளிப்பதில் இத்திட்டம் குறிப்பிடத்தக்க நடவடிக்கைஎன்றார்.

வீட்டு தனிமையில் இருக்கும் 70 சதவீத கொவிட் நோயாளிகளை நிர்வகிப்பதில், இந்த நடவடிக்கை முக்கிய பங்கு வகிக்கும் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளின் நெருக்கடியைக் குறைப்பதோடு, மக்களிடையே பரவும் அச்சத்தைத் தடுக்கும்.

மேலும், ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை சரியாகப் பயன்படுத்துவது குறித்தும் மக்களுக்கு இத்திட்டத்தின் பயிற்சியாளர்கள் கற்றுக் கொடுப்பர்.

இத்திட்டத்தின் கீழ் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ தொண்டர்களைத் திரட்டி, கொவிட் பாதிப்பு பகுதிகளில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி வீட்டில் இருக்கும் கொவிட் நோயாளிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்கும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களில், பராமரிப்பாளர்களுக்கு கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது, உளவியல் ஆதரவு அளிப்பது, நோயாளிகளின் உடல்நிலை குறித்து மாவட்ட நிர்வாகத்தினரிடம் சரியான நேரத்தில் தெரிவிப்பது  போன்றவை குறித்து கற்றுக்கொடுக்க தன்னார்வ தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725329

***************

 



(Release ID: 1725344) Visitor Counter : 231