சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தின் சர்வதேச உணவு பாதுகாப்பு தின நிகழ்ச்சியில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் உரையாற்றினார்

Posted On: 07 JUN 2021 5:43PM by PIB Chennai

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் ஏற்பாடு செய்த சர்வதேச உணவு பாதுகாப்பு தின நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி மூலம் உரையாற்றினார்.

விவசாய நிலம் முதல் உணவு மேசை வரையிலான ஒட்டுமொத்த உணவு சங்கிலியோடு உணவு பாதுகாப்பு இணைக்கப்பட வேண்டும். இதற்கான சமமான பொறுப்பை அரசு, தொழில்துறை மற்றும் நுகர்வோர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.

மேலும் பேசிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், “ஊட்டச்சத்து கொள்கைகள் மற்றும் கல்வியின் முக்கிய கூறாக உணவு பாதுகாப்பு இருக்க வேண்டும்,” என்றதோடு, “உணவு சங்கிலிகள் நீளமாக, சிக்கலாக மற்றும் சர்வதேசத்தன்மை வாய்ந்தவையாக உருவாகி வரும் வேளையில், உணவு மாசுபாடு மூலம் நோய்கள் உருவாவது கவலை அளிக்கிறது,” என்றார்.

இதன் காரணமாக வருடத்திற்கு 15 பில்லியன் டாலர்கள் செலவாவதாகவும், 2030-ம் ஆண்டுக்குள் வருடத்திற்கு 150-ல் இருந்து 177 மில்லியனாக உணவு மூலம் ஏற்படும் நோய்களின் பாதிப்புகள் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

உணவு பாதுகாப்பை உறுதி செய்து அதனோடு சார்ந்த சிக்கல்களை களைய அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறி அமைச்சர் தமது உரையை நிறைவு செய்தார்.

அவரது உரையை https://youtu.be/P6sKME3H3pg எனும் இணைப்பில் காணலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725089

 


(Release ID: 1725179) Visitor Counter : 209