பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மருந்துகளை விட இயற்கையான எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பொருட்கள் அதிக பயனளிக்கின்றன: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
07 JUN 2021 5:21PM by PIB Chennai
மருந்துகளை விட இயற்கையான எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பொருட்கள் அதிக பயனளிக்கின்றன என்று முன்னாள் நீரிழிவு மற்றும் மருத்துவ பேராசிரியரும், இந்திய நீரிழிவு ஆய்வுக்கான ஆராய்ச்சி சங்கத்தின் வாழ்நாள் புரவலருமான மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.
உலக உணவு பாதுகாப்பு தினம் 2021-ஐ முன்னிட்டு பிஎச்டி வர்த்தக & தொழில் அமைப்பு ஏற்பாடு செய்த ‘ஆரோக்கியமான நாளைக்காக இன்றைய பாதுகாப்பான உணவு’ எனும் கருத்தரங்கில் தலைமை விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த இருபது வருடங்களாக பல்வேறு முன்னணி மருத்துவ சஞ்சிகைகளில் வெளியான பல ஆய்வுகளை பற்றி குறிப்பிட்ட அமைச்சர், ஆங்கில மருத்துவ முறையில் வைட்டமின் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டாலும், வைட்டமின்களுக்கான இயற்கை ஆதாரங்கள் மற்றும் இயற்கை ஆக்சிஜனேற்றிகள் அதிக நம்பகத்தன்மையுடனும், செயல்திறனுடனும் விளங்கக்கூடும் என தெரிவித்தார்.
நோய்களை, குறிப்பாக தொற்று நோய்களை, நோய் எதிர்ப்பு சக்தி முறைகளின் மூலம் எதிர்கொள்வது இந்திய மருத்துவ மேலாண்மையின் முக்கிய அம்சமாக விளங்கி வருகிறது என்று அவர் கூறினார்.
இன்றைய கொவிட்-19 காலகட்டத்தில், ஊட்டச்சத்து, உணவில் உள்ள பொருட்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின் மீதான அவற்றின் தக்கம் குறித்து அனைவரும் அறிந்து கொள்வது அவசியம் என்று அவர் கூறினார்.
கருத்தரங்கில் உரையாற்றிய அர்ஜெண்டினா தூதர் திரு ஜாவியெர் கொப்பி, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் அவரது நாடு இந்தியாவுக்குக் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725084
------
(Release ID: 1725170)