அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

விமான பாகங்கள் தயாரிக்க பயன்படும் அலுமினிய உலோக கலவைகளின் திறன் புதிய நடைமுறை மூலம் அதிகரிப்பு: இந்திய விஞ்ஞானிகள் சாதனை

Posted On: 07 JUN 2021 3:41PM by PIB Chennai

விமான பாகங்கள் தயாரிக்க பயன்படும் அலுமினிய உலோக கலவைகளின் திறனை அதிகரிக்க, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற  புதிய நடைமுறையை  இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

விமானங்கள் மற்றும் விண்வெளிப் பொருட்கள், ஜவுளி இயந்திரங்கள் மற்றும் வாகன தயாரிப்பில் அலுமினியம் உலோகக் கலவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

இது அடர்வு குறைவாகவும், பலம் அதிகமாகவும் இருப்பதால், விமான பாகங்கள் தயாரிப்பில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

இதன் தேய்மானத்தை தடுத்து பலத்தை அதிகரிக்க சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நடைமுறையை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். உலோக மூலக்கூறின் மீதான ஆக்சைடு பிலிம் தயாரிப்பு முறையில் மின்ரசாயண முறை இதில் உள்ளடங்கியுள்ளது.

இதில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நடைமுறை இருக்க வேண்டும் என்ற தேவை அதிகரித்துள்ளதால், மைக்ரோ-ஆர்க் ஆக்சிடேஷன் (MAO) என்ற முறையை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான தூள் உலோகம் மற்றும் புதிய பொருட்களுக்கான சர்வதேச ஆராய்ச்சி மையத்தில் (ARCI) உருவாக்கப்பட்டுள்ளதுஇந்த நடைமுறையில் அல்கலைன் எலக்ட்ரோலைட் நடைமுறை உள்ளடங்கியுள்ளது.

இது அலுமினிய பாகங்களின் தேய்மானத்தை தடுக்கிறது.

மேலும் விவரங்களுக்கு https://doi.org/10.1016/j.ijfatigue.2020.105965

Dr L. Rama Krishna, Scientist- ‘F’, Centre for Engineered Coatings & Chairman, Aerospace Working Group of ARCI, Email id: lrama@arci.res.in can be contacted.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725059

------


(Release ID: 1725137) Visitor Counter : 1260


Read this release in: English , Urdu , Hindi , Punjabi