புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

12,000 மெகாவாட் சூரியசக்தி திட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 15 வரை நீட்டிப்பு

Posted On: 07 JUN 2021 3:32PM by PIB Chennai

சாத்தியக்கூறு இடைவெளி நிதி வசதியுடன் கூடிய, தொகுப்புடன் இணைக்கப்பட்ட மத்திய பொதுத் துறை நிறுவன திட்டத்தின் இரண்டாம் கட்ட 12,000 மெகாவாட் சூரியசக்தி திட்டங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை ஜூன் 15 வரை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி முகமை (ஐஆர்ஈடிஏ) நீட்டித்துள்ளது.

முந்தைய கடைசி தேதியாக மே 30 இருந்தது. உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சூரியசக்தி செல்கள் மற்றும் பிரிவுகளின் விலை வித்தியாசத்தை ஈடு செய்வதற்காக இரண்டு கட்டங்களாக சாத்தியக்கூறு இடைவெளி நிதி வழங்கப்படும்.

தங்களது விண்ணப்பங்களை 2021 ஜூன் 15-க்குள் மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஜூலை 20-க்குள் வெற்றிகரமான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முன்னதாக, இத்திட்டத்தின் செயல்படுத்தும் முகமையாக இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி முகமையை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் நியமித்தது.

இத்திடத்தின் கீழ், அரசு உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்படும் மின்சாரத்தை அரசு/அரசு நிறுவனங்கள் நேரடியாகவோ அல்லது விநியோக முகமைகள் மூலமாகவோ ஒரு யூனிட்டுக்கு ரூ 2.45-க்கு மிகாத விலையில் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு மெகாவாட்டுக்கு ரூ 55 லட்சத்துக்கு மிகாமல் சாத்தியக்கூறு இடைவெளி நிதி வழங்கப்படும்.

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் சாத்தியக்கூறு இடைவெளி நிதி தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, விலை விகிதம் குறைந்தால், அதுவும் குறைக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725054

 

------



(Release ID: 1725096) Visitor Counter : 156