புவி அறிவியல் அமைச்சகம்

தில்லியில் காற்றின் தரம் இன்றும் நாளையும் மிதமாக இருக்கும்: வானிலை மையம்

இடுகை இடப்பட்ட நாள்: 06 JUN 2021 2:22PM by PIB Chennai

தில்லி- தேசிய தலைநகர் பகுதியில் காற்றின் தரம் இன்றும் (06.06.2021), நாளையும் (07.06.2021)  மிதமாக இருக்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் தேசிய வானிலை  முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

08.06.2021 அன்று காற்றின் தரம் மிதமானதிலிருந்து  மோசமானதாக மாறக்கூடும். காற்றில் உள்ள மாசுவின் அளவு 10 மைக்ரோ மீட்டர் என்ற அளவில் இருக்கும். மேற்பரப்பில் வீசும் பலத்த காற்று, புழுதியை கிளப்பலாம், அல்லது அருகில் உள்ள பகுதியில் இருந்து தூசுக்களைக் கொண்டு வரலாம்.  

இந்தப் பகுதியில் அடுத்த 5 நாட்களுக்கு காற்றின் தரம் மிதமானதிலிருந்து மோசமானதாக இருக்கக்கூடும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1724911

 

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1724928) வருகையாளர் எண்ணிக்கை : 188
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी