சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 தொற்று குறித்த அண்மைத் தகவல்கள்
प्रविष्टि तिथि:
06 JUN 2021 9:29AM by PIB Chennai
இந்தியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 நாட்களில் மிகக் குறைவாக,1.14 லட்சமாகப் பதிவாகியுள்ளது.
10-வது நாளாக 2 லட்சத்திற்கும் குறைவான அன்றாட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 77,449 குறைந்துள்ளது.
நம் நாட்டில் இதுவரை 2.69 கோடிக்கும் அதிகமானோர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 1,89,232 பேர் குணமடைந்தனர்.
தொடர்ந்து 24-வது நாளாக, தினசரி பாதிப்புகளை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தேசியளவில் குணமடைபவர்கள் வீதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விழுக்காடு தற்போது 93.67% ஆக பதிவாகியுள்ளது.
வாராந்திர தொற்று உறுதி வீதம் 6.54% ஆகும்.
அன்றாட பாதிப்பு வீதம் தொடர்ந்து சரிந்து 5.62% ஆக உள்ளது. தொடர்ந்து 13 நாட்களாக இந்த அளவு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இதுவரை 36.4 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 23.13 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1724870
------
(रिलीज़ आईडी: 1724921)
आगंतुक पटल : 229