அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சிஎஸ்ஐஆர்-சிஎம்ஈஆர்ஐ-யின் முன்னேறிய ஆக்சிஜன் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஜம்மு & காஷ்மீரில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களை மேம்படுத்திக் கொள்கின்றன

Posted On: 04 JUN 2021 5:38PM by PIB Chennai

ஜம்மு & காஷ்மீரில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காகஆக்சிஜன் மேம்படுத்தல் உபகரணம் - பிராணவாயு பற்றாக்குறையை தீர்க்க சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன பங்குதாரர்களுக்கு அழைப்புஎனும் தலைப்பிலான இணைய கருத்தரங்கத்தை 2021 ஜூன் 4 அன்று சிஎஸ்ஐஆர்-சிஎம்ஈஆர்ஐ உடன் இணைந்து எம்எஸ்எம்ஈ-டிஐ, ஜம்மு, நடத்தியது.

காஷ்மீர் தொழிற்சாலைகள் சங்கத்தின் கூட்டமைப்பு தலைவர் திரு ஷாஹித் காம்லி, ஜம்மு & காஷ்மீர் சிட்பி பொறுப்பாளர் திரு சஞ்சீத் வெர்மா, ஜம்மு & காஷ்மீர் தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக இயக்குநரகத்தின் உதவி இயக்குநர் திரு மகிந்தர் குமார் சர்மா மற்றும் பல்வேறு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

இணைய கருத்தரங்கில் பேசிய சிஎஸ்ஐஆர்-சிஎம்ஈஆர்ஐ இயக்குநர் பேராசிரியர் ஹரிஷ் ஹிரானி, ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசங்கள் எதிர்கொண்டு வரும் பல்வேறு சமுக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எதிர்கொள்ள உதவும் பல்வேறு புதுமையான தீர்வுகள் சிஎஸ்ஐஆர்-சிஎம்ஈஆர்ஐ இடம் ஏற்கனவே இருப்பதாக தெரிவித்தார்.

காயங்களை விரைவில் ஆறச் செய்தல், செல் செப்பனிடுதல் மற்றும் உடல் உறுப்புகள் தங்களை தாங்களே குணப்படுத்திக் கொள்ளுதல் ஆகியவற்றில் ஆக்சிஜன் தெரப்பி பயன்படுவதால், வரும் காலங்களில் அதன் முக்கியத்துவம் அதிகரிக்கும் என்று பேராசிரியர் ஹிரானி  கூறினார். ஜம்மு & காஷ்மீரில் சாதாரண சமயங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் என்பதால், ஆக்சிஜன் புத்துணர்ச்சி மையங்களை அவர்களுக்காக அமைக்கலாம்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான இந்திய அரசின் சேஃப், ஷ்வாஸ் மற்றும் ஆரோக் நிதியுதவி திட்டங்கள் குறித்த விரிவான விளக்கத்தை ஜம்மு & காஷ்மீர் சிட்பி பொறுப்பாளர் திரு சஞ்சீத் வெர்மா வழங்கினார்.

சமீபத்திய ஆக்சிஜன் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி போதுமான பிராண வாயு விநியோகத்தை நாடு முழுவதும் உறுதி செய்யுமாறு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1724455

***



(Release ID: 1724513) Visitor Counter : 179


Read this release in: English , Urdu , Hindi , Punjabi