பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஜம்மு & காஷ்மீரின் உதம்பூரில் உருவாகவுள்ள தேவிகா திட்டத்திற்கு அனைத்து பிரிவினரும் ஆலோசனைகளை வழங்க வேண்டும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 03 JUN 2021 7:36PM by PIB Chennai

தேவிகா திட்டம் அனைவருக்குமானது என்றும், எனவே அனைத்து பிரிவினரும் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.

இது வெறும் திட்டமல்ல என்று கூறிய அமைச்சர், அனைவரின், குறிப்பாக உதம்பூர் மக்களின், நம்பிக்கை சார்ந்ததாக தேவிகா திட்டம் விளங்குகிறது என்றும், எனவே  அரசியலை கடந்து அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளும் நேர்மறையாகவே பார்க்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

தலைமை செயலாளர் திரு அருண் குமார் மேத்தா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு வாரிய முதன்மை செயலாளர் திரு தீரஜ் குப்தா, உதம்பூர் துணை ஆணையர் இந்து கன்வால் சிப் மற்றும் இதர மூத்த அதிகாரிகள் கலந்துக் கொண்ட  உயர்மட்ட கூட்டத்தில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், அனைத்து பிரிவு மக்களின் கருத்துகளுக்கும் செவிமடுக்குமாறு அவர்களை கேட்டுக்கொண்டார்.

இதன் மூலம் ஒட்டுமொத்த பகுதிக்கும் இத்திட்டம் உதாரணமாக விளங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மத்திய அரசின் நமாமி கங்கா திட்டத்திற்கு இணையான முக்கியத்துவத்தோடு இத்திட்டம் விளங்குவதாக குறிப்பிட்ட அமைச்சர், இதற்கு ஒப்புதல் அளித்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடியை பாராட்டினார். 

<><><><><>



(Release ID: 1724213) Visitor Counter : 193


Read this release in: English , Urdu , Hindi , Punjabi