தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைதொடர்பு உபகரணங்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை தொலைதொடர்பு துறை வெளியிட்டுள்ளது
Posted On:
03 JUN 2021 5:58PM by PIB Chennai
தொலைதொடர்பு மற்றும் நெட்வொர்க் உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தி, முதலீடு மற்றும் ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை 2021 பிப்ரவரி 24 அன்று தொலைதொடர்பு துறை வெளியிட்டது. துறை சார்ந்தவர்களுடனான விரிவான ஆலோசனைகளுக்கு பிறகு, 2021 ஜூன் 3 அன்று செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தியாவில் இருந்து சர்வதேச வெற்றியாளர்களை உருவாக்கவும், அவர்களின் வளர்ச்சி மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக சர்வதேச மதிப்பு சங்கிலிகளில் இடம்பிடிப்பதும் இந்த திட்டத்தின் நோக்கங்களாகும். ‘டிஜிட்டல் இந்தியாவின்’ லட்சியத்தில் தொலைதொடர்பு பொருட்களுக்கும் முக்கிய இடமுண்டு.
ஐந்து வருடங்களில் ரூ 12,195 கோடி மதிப்பில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஒதுக்கீடு ரூ 1,000 கோடியாக இருக்கும்.
இத்திட்டத்திற்கான மேலாண்மை முகமையாக சிட்பி இருக்கும். 2021 ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மேற்கண்ட தேதியில் இருந்து 2024-25 நிதியாண்டு வரை வெற்றிகரமான விண்ணப்பதாரர்களால் செய்யப்படும் முதலீடுகள் திட்டத்திற்கு தகுதியானவையாக இருக்கும். 2021-22 நிதியாண்டு முதல் 2025-26 நிதியாண்டு வரை இத்த்திட்டத்தின் கீழ் ஆதரவு அளிக்கப்படும்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்,
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இல்லா நிறுவனங்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள், இந்திய தொழில்நுட்பத்துடன் கூடிய பொருட்களின் உற்பத்தியாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
2021 ஜூன் 4-ல் இருந்து 2021 ஜூலை 3 வரை 30 நாட்களுக்கு https://www.pli-telecom.udyamimitra.in எனும் இணைய முகவரியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
*****************
(Release ID: 1724168)
Visitor Counter : 298